» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி எஸ்பிக்கு கரோனா தொற்று உறுதி!
வியாழன் 20, ஜனவரி 2022 9:56:25 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்பி ஜெயக்குமார் உள்பட 323 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று மேலும் 323 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 60 ஆயிரத்து 513 ஆக அதிகரித்து உள்ளது. நேற்று 302 பேர் கரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ளனர். இதுவரை மொத்தம் 58 ஆயிரத்து 12 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் 2076 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தூத்துக்குடியை சேர்ந்த 78 வயது முதியவர் ஒருவரும், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தூத்துக்குடியை சேர்ந்த 68 வயது முதியவர் ஒருவரும், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தூத்துக்குடியை சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவரும் கரோனா தொற்று காரணமாக இறந்து உள்ளனர். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 425 ஆக அதிகரித்து உள்ளது. இதனிடையே தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை நிறைவு: இறுதி அறிக்கை முதல்வரிடம் தாக்கல்!
புதன் 18, மே 2022 5:53:51 PM (IST)

மே 22ல் மது விற்பனைக்கு தடை: ஆட்சியர் உத்தரவு!
புதன் 18, மே 2022 4:29:59 PM (IST)

தூத்துக்குடியில் ஏழை பெண்களுக்கு விலையில்லா ஆடுகள் : ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்கினார்
புதன் 18, மே 2022 3:57:58 PM (IST)

வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.15 கோடி மோசடி : இணைப் பதிவாளர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
புதன் 18, மே 2022 3:45:30 PM (IST)

முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் பணியிடம் : ஜூன் 10க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!
புதன் 18, மே 2022 3:28:32 PM (IST)

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு செல்லும் 1,000 மெட்ரிக் டன் அரிசி: தமிழக அரசு நடவடிக்கை
புதன் 18, மே 2022 3:21:06 PM (IST)
