» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குளத்தில் மீன்பிடிக்க சென்றவர் நீரில் மூழ்கி பலி : மகன் கண் முன்னே பரிதாபம்!

வியாழன் 20, ஜனவரி 2022 9:38:02 PM (IST)

சாத்தான்குளம் அருகே மீன்பிடிக்க சென்றவர் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள தெற்கு அமுதுண்ணாகுடியை சேர்ந்தவர் ராஜகோபால் (62). மரம்வெட்டும் தொழிலாளி. இவரும், அவரது மகன் மணிகண்டனும்(32) நேற்று அங்குள்ள குளத்தில் மீன் பிடிக்க வலைவிரித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ராஜகோபால் தடுமாறி குளத்தில் விழுந்தார். சிறிது நேரத்தில் அவர் தண்ணீரில் மூழ்கினார். மணிகண்டனுக்கு நீச்சல் தெரியாததால் உடனடியாக அவரால் தந்தையை காப்பாற்ற முடியாமல் கரையில் இருந்தவாறு கூச்சல் போட்டார்.

அவரது சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் குளத்துக்கு திரண்டு வந்து ராஜகோபாலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சாத்தான்குளம் தீயணைப்புநிலைய அலுவலர் மாரியப்பன் தலைமையில வீரர்கள்சென்றுராஜகோபாலை தேடும்பணியில் ஈடுபட்டனர். இரவு நேரமாகி விட்டதால் மீட்புபணி தடைபட்டது. 

இதையடுத்து இன்று காலையில் தீயணைப்புவீரர்கள், குளத்தில் தேடியதில் இறந்தநிலையில் ராஜகோபால் உடலை மீட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த சாத்தான்குளம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory