» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாடகை செலுத்தாத 3 கடைகளுக்கு சீல்வைப்பு : ஆணையர் அதிரடி நடவடிக்கை!

வியாழன் 20, ஜனவரி 2022 9:33:20 PM (IST)

கோவில்பட்டியில் வாடகை செலுத்தாத 3 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தையில் நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ள கடைகளுக்கு சீல் வைக்கும்படி ஆணையர் ராஜாராம் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து நகராட்சி வருவாய் ஆய்வாளர்கள் பிரேம்குமார், விஜயகுமார், பட்டாணி மற்றும் பணியாளர்கள் தினசரி சந்தையில் வாடகை பாக்கி வைத்துள்ள 3 கடைகளுக்கு பூட்டு போட்டு சீல் வைத்தனர். இதனால் சந்தையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இதுதொடர்பாக ஆணையர் கூறுகையில், கோவில்பட்டி நகரசபை தினசரி சந்தை, அண்ணா பஸ் நிலையம் கடைகளில் நீண்ட நாள் பாக்கி வைத்துள் வர்கள் வாடகை பாக்கியை நகரசபையில் உடனடியாக செலுத்தி கடைக்காரர்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இது தொடர்பாக பலமுறை அவர்களுக்கு நகரசபை மூலம் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. 

அதையும் மீறி வாடகை பாக்கியை செலுத்தாதவர்களின் கடைகளுக்கு சீல் வைக்கு முடிவு செய்யப்பட்டது. அதன்படி 3 கடைகளுக்கு முதல்கட்டமாக சீல் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாடகை பாக்கி செலுத்தாத கடைகளும் பூட்டப்பட்டு சீல் வைக்கப்படும். எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் சம்மந்தப்பட்ட  கடைக்காரர்கள் வாடகை பாக்கியை உடனடியாக நகசரபைக்கு செலுத்தி ஒத்துழைக்க வேண்டும்’ என கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory