» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் முக கவசம் அணியாத மக்களுக்கு காவல்துறை ஆய்வாளர் அறிவுரை!

வியாழன் 20, ஜனவரி 2022 8:40:17 PM (IST)தூத்துக்குடியில் தென்பாகம் காவல் ஆய்வாளர் ஆனந்தராஜ், முக கவசம் அணியாத மக்களுக்கு முககவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 

கரோனா நோய் பரவலை கட்டுப்படுத்திட பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி அண்ணா நகர் மெயின் ரோட்டில் கண்காணிப்பில் ஈடுபட்ட தென்பாகம் காவல் ஆய்வாளர் ஆனந்தராஜ், முக கவசம் அணியாத மக்களுக்கு முக கவசம் வழங்கினார். மேலும் முக கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும், இதன் மூலம் நோய்தொற்றில் இருந்து நம்மை தற்காத்து கொள்ளலாம். முக கவசம் அணிந்து வரவில்லை என்றால் அபதாரம் விதிக்கப்படும் என்றும் எடுத்துரைத்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory