» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஹெராயின் வழக்கில் மேலும் 4பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

வியாழன் 13, ஜனவரி 2022 12:03:12 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.21 கோடி மதிப்புடைய ஹெராயின் பதுக்கிய வழக்கில் மேலும் 4பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 21.12.2021 அன்று ரூ.21 கோடி மதிப்புடைய ஹெராயின் போதைப் பொருள் பிடிபட்டது. இது தொடர்பாக 7பேரை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய  தூத்துக்குடி அண்ணா நகர் மைதீன் மகன் அன்சார்அலி (26), யோஸ்வரர் காலனி முனியசாமி மகன் மாரிமுத்து (26), டூவிபுரம் ஷாஜஹான் மகன் இம்ரான்கான் (27), தருவைகுளம் கோசல்ராம் மகன் பாலமுருகன் (26) ஆகிய 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பரிந்துரை செய்தார். 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பிறப்பித்த உத்தரவின் பேரில் அவர்கள் 4பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் தொடர்புடைய 3பேர் ஏற்கனவே குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory