» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கடைகளில் திருடிய வாலிபர் கைது

வியாழன் 9, டிசம்பர் 2021 8:00:34 AM (IST)

தூத்துக்குடியில் 4 கடைகளில் பூட்டை உடைத்து திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி- எட்டயபுரம் ரோடு பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் உள்ள 4 கடைகளில் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் பணம் மற்றும் பொருட்களை திருடிச் சென்றனர். இது தொடர்பாக சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். 

அப்போது, தூத்துக்குடி பிரையண்ட் நகரைச் சேர்ந்த முத்து மாரியப்பன் மகன் கவுதம் (19) மற்றும் 2 பேர் சேர்ந்து 4 கடைகளிலும் பூட்டை உடைத்து திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் கவுதமை நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory