» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மழைநீர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை: அமைச்சர் கீதாஜீவன் பேட்டி

புதன் 8, டிசம்பர் 2021 9:07:18 PM (IST)



தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில்  மழைநீர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வாக மழை நீர் வடிகால்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார். 

தொடர் மழையின் காரணமாக தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பிரையண்ட் நகர், சிதம்பர நகர் 5வது தெரு, வ.உ.சி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, முத்துகிருஷ்ணா நகர், பி அண் டி காலனி, பண்டாரம்பட்டி கால்வாய், ஆதிபராசக்தி நகர், டிஎஸ்எப் கார்னர் ஆகிய பகுதியில் தேங்கியிருந்த மழை நீரை வெளியேற்றும் பணிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ,  ஆகியோர் உடனிருந்தனர்.

ஆய்வின்போது அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு அதிக அளவு கன மழை பெய்துள்ளது. சொல்லப்போனால் சுமார் 2 மடங்கிற்கு மேலாக மழை பெய்துள்ளது. நகர்புறங்களுக்கு தெற்கு பகுதியை தவிர மற்ற 3 பகுதிகளிலும் அதிக அளவு மழை பெய்துள்ளது. 27.10.2021-ல் தொடங்கிய மழை 4 செ.மீ. 30.10.2021-ல் 9 செ.மீ., 1.11.2021-ல் 2 செ.மீ., 9.11.2021-ல் 3 செ.மீ. இவ்வளவு மழை நீரும் வெளியேற்றப்பட்டது. ஆனால் 25.11.2021-ல் வந்த 26 செ.மீ. மழையில் மாநகராட்சி பகுதிகளில் மற்ற இடங்களில் தண்ணீர் தேங்கியது. அனைத்து இடங்களில் இருந்தும் மின் மோட்டார்கள் வரவழைக்கப்பட்டு தேங்கிய மழை நீரை அகற்றும் பணி வேகமாக நடைபெற்றது. 

தமிழ்நாடு முதலமைச்சர் ஆய்வு செய்து பின்னர் கூடுதலாக 50எச்பி 20 மோட்டார்கள் சேலம் மற்றும் திருச்சியில் இருந்து வரப்பெற்று அந்த மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணி நடைபெற்றது. இந்தாண்டு 13 செ.மீ. மழை பெய்தது. கடந்தாண்டு ஏற்கனவே முன்கூட்டியே திட்டமிடப்பட்டு முன்கூட்டியே 29 இடம் தேர்வு செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக இரயில்வே பாதையினை ஒட்டிய ஓடை மூலமாக பி அண் டி காலணிக்கு தண்ணீர் வருவது கண்டறியப்பட்டதுடன் அந்த இடம் உயர்த்தப்பட்டது. அதனால் வெளியில் இருந்து வரும் வெள்ள நீர் தடுக்கப்பட்டுள்ளது. அதனால் அங்குள்ள மழைநீர் எளிதாக அகற்றப்பட்டது. உதாரணமாக லெவிஞ்சிபுரத்தில் 4 மோட்டார்கள் சுமார் 3 மாதம் காலமாக கடைசி வரை இயக்கப்பட்டது. 

எனவே தற்பொழுது அங்குள்ள நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. முத்துகிருஷ்ணா புரம் சென்று பார்க்கும் பொழுது 15 நாட்களில் அங்குள்ள தண்ணீர் குறைந்துள்ளது. 2 நாட்களில் 1 அடி குறைந்துள்ளது. அதேபோல் ரக்மத் நகர், முத்தமாள் காலனி, ஆதிபராசக்தி நகர் பகுதிகளில் சுமார் 1¼ அடி தண்ணீர் குறைந்துள்ளது. சாலைகளை சரிபடுத்தும் பணி நடைபெறுகிறது. நிரந்தரத் தீர்வாக மழை நீர் வடிகால்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரூ.89 கோடி சீரமைத்த பணிக்காக ஒதுக்கீடு செய்து தர கேட்கப்பட்டுள்ளது. இரயில்வேக்கும், பி அன் டி காலனிக்கும் இடையே தடுப்புச்சுவர் கட்டுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

கேவிகே நகரில் வடக்கு, தெற்கு பக்கமாக கால்வாய் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆதிபராசக்தி நகருக்கு வரும் தண்ணீர் மற்றும் அங்குள்ள நீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அவர்களும் 8 நடமாடும் குழுக்களை அமைத்து அனைத்து இடங்களிலும் இயங்கும் மோட்டார்களை கண்காணித்து இயக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டார்கள். ஆதிபராசக்தி நகர் பகுதியில் தேங்கும் நீரினை கடலிற்கு கொண்டு செல்வதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது.

ரூ.157 கோடி ஏசியன் டெவலெப்மெண்ட் பேங்க் மூலம் நிதி ஒதுக்கீடு கோரி முத்தம்மாள்காலணி, ரஹ்மத்நகர், ஆதிபராசக்திநகர், தனசேகர்நகர், அம்பேத்கர் நகர் ஆகிய பகுதியில் கழிவுநீர் கால்வாய் அல்லது மழைநீர் வடிகால் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் ஊற்று உள்ளது. அங்குள்ள நீரினையும் தொடர்ந்து வெளியேற்றும் பணி நடைபெறுகிறது. சுமார் 438 மோட்டார்கள் மூலம் மழை நீர் வெளியேற்றும் பணி நடைபெற்று வேகமாக வெளியெற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் தொடர்ந்து எங்களிடம் பணிகளை விரைந்து செய்யுமாறு அறிவுறுத்தினார்கள். அதன்படி பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்,  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தற்பொழுது 8 நில அளவையர்கள், 8 வட்டாட்சியர்கள் மற்றும் 8 உதவியாளர்களுடன் 8 மாவட்ட குழுக்கள் மூலமாக உதவி இயக்குநர் நில அளவை தலைமையில் மழை நீர் வடிகால்களை மெட்ராஸ் கெசட்டில் இருந்து வடக்கில் இருந்து எங்கு எங்கு இருந்து ஓடைகள் வழியாக கிழக்கு நோக்கி கடலில் கலக்கிறதோ அந்த நீர் வழித்தடங்களை கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தண்ணீர் தடம் உள்ள பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நிரந்தர தீர்விற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் 3 மாறுபட்ட இடங்களில் தண்ணீர் செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. 

நில கடல் உணவு வரை 315மிமீ அளவு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. வடக்கில் அது நிரந்ர தீர்வாக இருக்கும். அதேபோல் தெற்கு பகுதியில் அந்த இடத்தில் பழைய SBI  கல்வெட்டு பகுதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மழை நீரை எளிதில் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. மாப்பிள்ளையூரணி மாதாநகர், தாம்போதி பகுதியில் தோரயமாக கடலில் கலக்கும் வகையில் நடவடிக்கைகள் மற்றும் ஸ்டெம்பார்க்க, சத்யா திரையரங்கம் வழியாக கலைஞர் நகர் வரை செல்லும் தாம்போதி அந்த பகுதிகளையும் அந்த வழித்தடங்களையும் ஆராயும் பணி நடைபெறுகிறது. தூத்துக்குடி பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.


மக்கள் கருத்து

manithanDec 9, 2021 - 10:46:33 AM | Posted IP 173.2*****

கோக்கூர் குளம் காணவில்லை அது கிடைத்தாலே அந்த பகுதியில் தண்ணீர் தேங்காது.

K.ganeshanDec 8, 2021 - 09:42:35 PM | Posted IP 173.2*****

சிறப்பாக பணியாற்றிய அமைச்சர், கலெக்டர், கமிஷனர் மற்றும் பிற அதிகாரிகளுக்கு மிக்க நன்றி.👌🌹💐🙏🙏

ஏரியா காரன்Dec 8, 2021 - 09:33:53 PM | Posted IP 162.1*****

மழைநீர் வடிகால் அமைக்கச் சொன்னா ரோட்டில் மூன்று பக்கமும் சாக்கடை வடிகால் அமைசிட்டாங்க மாநகராட்சி துட்டு பயலுக ..

AmuthaDec 8, 2021 - 09:33:37 PM | Posted IP 173.2*****

மதிப்பிற்குரிய அய்யா /அம்மா எங்கள் தெரு முழுவதும் (RSPR Nagar,3 rd Street,Near Annai school, Tuticorin)கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் டெங்கு, மலேரியா போன்ற அபாயகரமான நோய்கள் ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. இதனால் ஆட்டோ போன்ற வாகனங்கள் எங்கள் தெருவிற்கு வர இயலாத சூழ்நிலை ஏற்படுகிறது. மேலும் இதனால் அத்தியாவசியப் பொருட்கள் வாங்கவோ அல்லது மருத்துவமனைக்கு செல்லவோ எங்களால் இயலவில்லை. ஆகவே இந்த மழை நீரை வெளியேற்ற உடனடியாக ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory