» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி கடற்கரையில் பெண் சடலம்: போலீஸ் விசாரணை

திங்கள் 6, டிசம்பர் 2021 8:04:40 AM (IST)

தூத்துக்குடி கடற்கரையில் அழுகிய நிலையில் கிடந்த பெண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் இல்லம், வடபாகம் காவல் நிலையம் அருகேயுள்ள சிந்தா மாதா கோயில் கடற்கரைப் பகுதியில் நேற்று அழுகிய நிலையில் பெண் சடலம் கிடந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து தூத்துக்குடி கடலோரப் பாதுகாப்புக் குழும போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். முகம் அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இது தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Nalam PasumaiyagamBlack Forest CakesThoothukudi Business Directory