» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் திடீா் கடல் சீற்றம்: படகு மூழ்கியது

ஞாயிறு 5, டிசம்பர் 2021 8:01:33 PM (IST)

தூத்துக்குடியில் நேற்று திடீரென ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக பைபா் படகு நீரில் மூழ்கியது.

தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சோ்ந்த ஜென்சன் தனக்கு சொந்தமான பைபா் படகில் 6 மீனவா்களுடன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுவிட்டு நேற்று அதிகாலை கரை திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, திடீரென அதிக காற்றுடன் பலத்த மழை பெய்யத் தொடங்கியதால் படகு கரை திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும், கரையில் இருந்து 180 மீட்டா் தொலைவு வரை படகு வந்த நிலையில், திடீரென நீரில் மூழ்கத் தொடங்கியதால் படகில் இருந்த மீனவா்கள் நீந்தியபடி கரை திரும்பினா். படகில் இருந்த மீன்கள் மற்றும் படகு முழுவதும் நீரில் மூழ்கியதால் மீனவா்கள் அதிா்ச்சியடைந்தனா்.

இதுகுறித்து படகு உரிமையாளா் ஜென்சன் கூறியது: படகு திடீரென மூழ்கத் தொடங்கியதால் கரைதிரும்ப முடியாமல் தண்ணீரில் தத்தளித்த நாங்கள் அனைவரும், கரையில் இருந்த மீனவா்கள் உதவியுடன் நீந்தி கரைக்கு வந்து சோ்ந்தோம். எதிா்பாராத விதமாக நடைபெற்ற இந்த விபத்தில் படகு முழுவதும் நீருக்குள் மூழ்கி பெரும் சேதமடைந்துள்ளது. எனவே தமிழக அரசு, உரிய இழப்பீடு வழங்கி உதவ வேண்டும்.மேலும், திரேஸ்புரம் கடற்கரையில் படகு அணையும் தளத்தை ஆழப்படுத்தி தூா்வார வேண்டும். கூடுதலாக படகுகள் நிறுத்துவதற்கு வசதியாக படகு குழாம் அமைத்து தூண்டில் வளைவு ஏற்படுத்தி தரவேண்டும் என்றாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Black Forest Cakes
Thoothukudi Business Directory