» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பிரதமர் மோடியுடன் கலந்துரையாடும் வாய்ப்பு: பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு

ஞாயிறு 5, டிசம்பர் 2021 7:06:15 PM (IST)

பிரதமர் மோடியுடன் கலந்துரையாட மாணவ, மாணவிகளுக்கு அஞ்சல் துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி தபால் கோட்ட கண்காணிப்பாளர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: இந்திய திருநாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு தபால் அட்டை மூலம் இந்திய கல்வி இலாகா பிராசாரம் அறிவித்து உள்ளது. அதன்படி தபால் அட்டை பிரசாரம் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. 

தொடர்ந்து வருகிற 20-ம் தேதி வரை நடக்கிறது. இதில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து பள்ளி மாணவர்கள் 50 பைசாவுக்கு தபால் அட்டை வாங்கி பங்கு பெறலாம். மாணவ, மாணவிகள் 2047-ம் ஆண்டில் எனது பார்வையில் இந்தியா, போற்றப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் ஆகிய தலைப்புகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தபால் அட்டையை எழுதி, மாணவர்கள் படிக்கும் பள்ளி ஆசிரியரிடம் ஒப்படைக்கலாம். 

இந்திய தபால துறை அனைத்து பள்ளிக்கூடங்களிலும் மாணவ, மாணவிகள் ஒப்படைத்த தபால் அட்டையை சேகரித்து பிரதமருக்கு அனுப்பி வைக்கப்படும். சிறந்த 10 கருத்துக்களை எழுதிய பள்ளி குழந்தைகள் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடும் வாய்ப்பை பெறலாம். இந்த வாய்ப்பை அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory