» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சூதாட்டம், கஞ்சா, மது விற்பனை: 86 பேர் கைது!
ஞாயிறு 28, நவம்பர் 2021 7:48:22 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 86 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் கஞ்சா, மதுபாட்டில்கள், புகையிலைப் பொருட்கள், லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர்கள் மற்றும் பணம் வைத்து சூதாடியவர்கள் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் நேற்று தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர்.
அதன்படி தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் 10 வழக்குகளும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 6 வழக்குகளும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 9 வழக்குகளும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 9 வழக்குகளும், மணியாச்சி உட்கோட்டத்தில் 5 வழக்குகளும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 11 வழக்குகளும், விளாத்திக்குளம் உட்கோட்டத்தில் 12 வழக்குகளும், சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 5 வழக்குகளும், மதுவிலக்கு காவல் நிலையங்களில் 4 வழக்குகளும் ஆக மொத்தம் 71 வழக்குகள் பதிவு செய்து 86 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இதில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த 35 பேரும், புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்த 29 பேரும், சூதாட்டம் ஆடியவர்கள் 20 பேரும், கஞ்சா மற்றும் லாட்டரி சீட்டு விற்பனை செய்த வழக்குகளில் 2 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து 179 மதுபாட்டில்கள், 1775 புகையிலைப் பாக்கெட்டுகள் மற்றும் ரூ.7 ஆயிரத்து 300 ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் நடப்பு ஆண்டில் இதுவரை சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 174 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் தேர்தல் : அமைச்சர் கீதாஜீவனிடம் விருப்ப மனுக்கள் அளிப்பு!
புதன் 10, ஆகஸ்ட் 2022 10:18:32 AM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
புதன் 10, ஆகஸ்ட் 2022 8:28:51 AM (IST)

மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் கைது
புதன் 10, ஆகஸ்ட் 2022 8:00:52 AM (IST)

ரஜினிகாந்த் 30 ஆண்டாக அரசியலுக்கு வருகிறேன் என கூறிவருகிறார்: கடம்பூர் ராஜு கிண்டல் !
செவ்வாய் 9, ஆகஸ்ட் 2022 11:24:11 PM (IST)

பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் 301 திருவிளக்கு பூஜை!
செவ்வாய் 9, ஆகஸ்ட் 2022 9:32:11 PM (IST)

இந்து சமய அறநிலையத் துறையை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்: 320பேர் கைது
செவ்வாய் 9, ஆகஸ்ட் 2022 9:20:30 PM (IST)
