» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் - தூத்துக்குடி போக்குவரத்து மீண்டும் தொடங்கியது

ஞாயிறு 28, நவம்பர் 2021 7:31:00 PM (IST)

ஆத்தூர் அருகே பாலத்தில் தண்ணீர் குறையாத நிலையில் திருச்செந்தூர் - தூத்துக்குடி சாலையில் பஸ் மற்றும் வாகன போக்குவரத்து இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த கனமழையின் காரணமாக ஆத்தூர், குரும்பூர். ஆறுமுகநேரி பகுதிகளில் குளங்கள் நிரம்பி அதன் உபரிநீர் வாய்க்காலில் செல்கின்றது. இதில் குரும்பூர் அருகே உள்ள கடம்பாகுளம் நிரம்பிய மறுகால் வழியாக தண்ணீர் பாய்கிறது. மேலும் வயல்களில் உள்ள மழைநீர் மற்றும் ஆங்காங்கே வழிந்தோடும் தண்ணீரும் சேர்ந்துவாய்க் கால்களில் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகிறது. 

இதனால் தூத்துக்குடி -திருச்செந்தூர் சாலையில் ஆத்தூர் அடுத்துள்ள தண்ணீர்பந்தல் அருகே உள்ள வரண்டியவேல் தரைப்பாலத்தின் மேல் சாலையில் 2 அடி உயரத்திற்கு மேல் தண்ணீர் செல்கிறது. இன்று 3வது நாளாகியும் தண்ணீர் வடியவில்லை. இருப்பினும் 2 நாட்களாக அந்த வழியாக தடை செய்யப்பட்டிருந்த பஸ் மற்றும் வாகன போக்குவரத்து இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. இதையடுத்து வழக்கம் போல் திருச்செந்தூரிலிருந்து புறப்படும் பஸ்கள் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்கள் ஆறுமுகநேரி, காயல்பட்டினம், ஆத்தூர், ஸ்பிக்நகர் வழியாக தூத்துக்குடிக்கு சென்றன. 

இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வரண்டியவேல் தரைப் பாலத்தில் இன்று காலை வரை தண்ணீர் வடியாத நிலையில் மீண்டும் அந்த ரோட்டில் பஸ் போக்குவரத்து தொடங்கியது. பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் வடிந்துள்ளதாலும், மழை குறைந்துள்ளதாலும் மதியத்திற்குள் இந்த ரோட்டில் தண்ணீர் முற்றிலும் வடிந்து விடும் என்று எதிர்பார்த்து அதிகாரிகள் இந்த முடிவை எடுத்துள்ளதாக போலீசார்தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory