» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தாய், மகளை தாக்கிய வாலிபர் கைது!

ஞாயிறு 28, நவம்பர் 2021 10:00:32 AM (IST)

கயத்தாறு அருகே தாய், மகளை தாக்கியதாக வாலிபரை போலீசார் கைது செய்தனா்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறை அடுத்த மூா்த்தீஸ்வரபுரம் கீழத் தெரு சண்முகையா மனைவி மாடத்தி(45). இவரது மகள் அப்பகுதியில் உள்ள நியாய விலைக்கடைக்கு சென்றபோது, அதே பகுதியைச் சோ்ந்த தங்கவேல் மகன் கணேசன் என்பவர் தாக்கினாராம். 

இதுகுறித்து கேட்கச் சென்ற மாடத்தியையும் கணேசன் மற்றும் அவரது மனைவி கனி, மகன் கவியரசு என்ற உத்தமகுமாா் ஆகியோா் தாக்கினராம். இதில் காயமடைந்த மாடத்தி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், கயத்தாறு காவல் போலீசார் வழக்குப் பதிந்து கணேசனை(40) நேற்று கைது செய்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham Hospital

Thoothukudi Business Directory