» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோபூஜை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்பு

ஞாயிறு 28, நவம்பர் 2021 9:37:33 AM (IST)வல்லநாடு சித்தி விநாயகர் கோவிலில் நடைபெற கோபூஜையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். 

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு சித்தி விநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள கோசாலையில் கோ பூஜை நடைபெற்றது. இதில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, விநாயகரை வணங்கி சிறப்பு கோ பூஜையில் கலந்துகொண்டார். கோசாலை வல்லநாடு நிறுவனர் நாராயணஜி தலைமை வகித்தார். பூஜைகளில் தச்சை கணேச ராஜா, வழக்கறிஞர் அன்பு அங்கப்பன், சன் தொலைக்காட்சி ஜோதிடர் தங்கராஜ், சமூக ஆர்வலர் நங்கமுத்து, தங்கம் ஹோட்டல் பரமசிவம், வல்லநாடு பஞ்சாயத்து தலைவர் சந்திரா முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

வல்லநாடு சித்தர் சாது சிதம்பர சாமிகள் தன்னார்வ குழுவின் தன்னலமற்ற சேவையை அண்ணாமலை பாராட்டினார். விழாவில் தன்னார்வ குழு தலைவர் முறப்பநாடு காவல் ஆய்வாளர் பாஸ்கரன், சமூக சேவை விருது பெற்ற சுந்தர், சிதம்பரம், மணிகண்டன், வல்லநாடு சாது சிதம்பர சுவாமிகள், ஸ்ரீ தம்பிராட்டி அம்மன் தன்னார்வகுவினர் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூரில் சாமிதரிசனம்

முன்னதாக திருச்செந்தூர் கோவிலில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தனது குடும்பத்துடன், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நேற்று வந்தார். கோவிலில் மூலவர், சண்முகர் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Nalam PasumaiyagamBlack Forest CakesThoothukudi Business Directory