» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வெள்ளத்தில் தவித்த மக்கள் படகு மூலம் மீட்பு

ஞாயிறு 28, நவம்பர் 2021 9:22:08 AM (IST)தூத்துக்குடியில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் தவித்த பொதுமக்கள் படகு மூலம் மீட்கப்பட்டனர்.

தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 25-ந்தேதி கனமழை பெய்தது. இதனால் பல இடங்களை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட பகுதிகள் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டு இருக்கிறது. 

குறிப்பாக, முத்தம்மாள் காலனி, ரஹ்மத் நகர், தனசேகர்நகர், குறிஞ்சி நகர், ராஜீவ்நகர், கதிர்வேல் நகர், ஸ்டேட் பேங்க் காலனி, பிரையண்ட்நகர், சுப்பையா முதலியார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். குறிஞ்சி நகர் பகுதியில் மழைநீர் பாசிபிடித்து பச்சை நிறமாக காட்சியளிக்கிறது. இதனால் அங்கு சுகாதார கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.

ராம்நகர், ரகுமத்நகர் பகுதிகளில் மழைநீர் அதிகளவு தேங்கி உள்ளதால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்து தவித்தனர். இதை அறிந்த தீயணைப்பு துறையினர் அப்பகுதிக்கு வந்து, ரப்பர் படகு மூலம் அவர்களை பத்திரமாக மீட்டனர்.

மாநகரில் பல இடங்களில் 3 நாட்கள் ஆகியும் தண்ணீர் வடியாமல் உள்ளது. சில பகுதிகளில் அந்த மழைநீரில் பாசி படர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.  அதே நேரத்தில், மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மின்மோட்டார்கள் மூலம் முழுமையாக தண்ணீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கூடுதல் மின்மோட்டார்களை பயன்படுத்தி, தேங்கிய நீரை விரைவாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Black Forest Cakes
Thoothukudi Business Directory