» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திமுக விருப்பமனு டிச.1ம் தேதியுடன் நிறைவு : அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு

சனி 27, நவம்பர் 2021 10:18:55 PM (IST)

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலுக்கான விண்ணப்ப படிவங்களை வாங்கும் தேதி 01.12.2021 அன்றுடன் நிறைவு பெறுகிறது.

இது தொடர்பாக வடக்கு மாவட்ட பொறுப்பாளா் அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்ட அறிக்கை : விரைவில் நடைபெற இருக்கும் நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலு்க்கான விண்ணப்ப படிவங்கள் பெறுவதற்கு தி.மு.க தலைமைக் கழகம் அறிவிப்பு செய்தது.

தலைமை கழகத்தின் அறிவிப்புக்கு இணங்க தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டு உறுப்பினா்களுக்கான பதவிக்கு போட்டியிட விரும்பும் கழகத் தோழா்கள் அதற்கான விண்ணப்ப படிவங்களை 21.11.2021 ஞாயிற்றுக்கிழமை முதல் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க அலுவலகமான கலைஞா் அரங்கில் வந்து வாங்கி பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை மாவட்ட கழக அலுவலகத்தில் அதற்குரிய கட்டணத்துடன் செலுத்தி ரசீதும் பெற்று வருகிறார்கள்.

இதற்கான காலக்கெடு 01.12.2021 புதன் கிழமையுடன் முடிவடைகிறது. அன்றைய தினம் மாலை 5.00 மணிக்குள் மாவட்ட கழக அலுவலகத்தில் வந்து நேரில் அளித்திட கழக நிர்வாகிகள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


Nalam Pasumaiyagam


Thoothukudi Business Directory