» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி - திருச்செந்தூர் போக்குவரத்து 2வது நாளாக தடை : மாற்றுப்பாதையில் பஸ்கள் இயக்கம்

சனி 27, நவம்பர் 2021 5:35:21 PM (IST)ஆத்தூர் அருகே தாம்போதி பாலத்தில் மழைவெள்ளம் செல்வதால், திருச்செந்தூர், தூத்துக்குடி மார்க்க பஸ்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆறுமுகநேரி, ஆத்தூர், காயல்பட்டினம், குரும்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் திருச்செந்தூர்,தூத்துக்குடி மெயின் ரோட்டில், ஆறுமுகநேரியில் இருந்து ஆத்தூர் செல்லும் வழியில் உள்ள தண்ணீர்பந்தல் தாம்போதி பாலத்தை மழை வெள்ளம் மூழ்கடித்து செல்கிறது. இன்று காலையில் தண்ணீரில் மூழ்கி சுமார் அரை அடி தண்ணீர் ஓடிய நிலையில் நேரம் ஆக ஆக தண்ணீர் அளவு அதிகரித்து, பகல் 2 மணி அளவில் சுமார் 2 அடி தண்ணீர் சென்றது. 

இதனால் அந்த பாதையில் தடுப்புகளை வைத்து போக்குவரத்துக்கு போலீசார் தடை விதித்தனர். இதை தொடர்ந்து ஆறுமுகநேரியில் இருந்து தூத்துக்குடி மார்க்கமாக செல்லும் வாகனங்கள் குரும்பூர், சேதுக்குவாய்த்தான், ஏரல், முக்காணி வழியாக தூத்துக்குடிக்கும், மறுமார்க்கத்தில் தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் பகுதிக்கு வரக்கூடிய வாகனங்கள் முக்காணி ரவுண்டானாவில் இருந்து ஏரல் சென்று சேதுக்குவாய்த்தான், குரும்பூர் வழியாக மீண்டும் ஆறுமுகநேரி வழியாக திருச்செந்தூர் சென்று வருகின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest CakesNalam PasumaiyagamThoothukudi Business Directory