» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருவிக நகரில் வெள்ளம்: கண்டுகொள்ளாத அதிகாரிகள் - அமைச்சர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

சனி 27, நவம்பர் 2021 11:38:30 AM (IST)



தூத்துக்குடி திருவிக நகரில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துளள்னர். 

தூத்துக்குடி 3வது மைல் எப்.சி.ஐ. குடோன் எதிரில் உள்ள மாநகராட்சி 52வது வார்டு பகுதிக்குட்பட்ட திருவிக நகர், இந்திரா நகர் 2-வது தெருவில் கடந்த 20 ஆண்டுகளாக சாலை வசதிகள் மற்றும் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்படவில்லை. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் பலமுறை மனு அளித்தும், மாநகராட்சி அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெய்த கனமழையால் அப்பகுதியில் மழைநீர் தேங்கி சுகாதாரமற்ற சூழ்நிலை நிலவி வருகிறது. ஆனால், வெள்ளத்தை வெளியேற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இப்பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றவும், இப்பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் சாலை, கால்வாய் அமைக்கவும் அமைச்சர் கீதாஜீவன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து

ஆமாப்பாNov 27, 2021 - 09:52:59 PM | Posted IP 173.2*****

அரசியல்வாதிகள் ரொம்பா பிஸி யா இருக்காங்களாம்.

T PIONov 27, 2021 - 12:00:51 PM | Posted IP 108.1*****

lIONS tOWN 5HT STREET SAME PROBELEM. NO DRAINAGE FACILITY

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital









Thoothukudi Business Directory