» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

லாரியுடன் ரூ.1.10 கோடி முந்திரி கடத்தல் : முன்னாள் அமைச்சர் மகன் உட்பட 7பேர் கைது

சனி 27, நவம்பர் 2021 10:37:41 AM (IST)



தூத்துக்குடியில் ரூ.1.10 கோடி மதிப்பிலான முந்திரியை லாரியுடன் கடத்தியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் மகன் உட்பட 7பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து ஜப்பானிற்கு ஏற்றுமதி செய்வதற்காக, கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் உள்ள தனியார் முந்திரி ஆலையில் இருந்து ரூ.1.10 கோடி மதிப்புள்ள 12 டன் எடை கொண்ட முந்திரியுடன், தூத்துக்குடி துறைமுகத்திற்கு லாரி சென்றது. இந்த லாரியை ஆலங்குளத்தைச் சேர்ந்த ஹரி என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கத்தியை காட்டி டிரைவரை மிரட்டி லாரியை கடத்தினர். 

இது தொடர்பாக டிரைவர் ஹரி, முந்திரி ஆலை மேலாளர் ஹரிகரன் தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து அவர், புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரமேஷ், ரூரல் ஏஎஸ்பி சந்தீஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அனைத்துச் சோதனை சாவடிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த லாரியை மடக்கி பிடித்தனர். மேலும், பின்னால் காரில் வந்த 7பேரை பிடித்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில் தூத்துக்குடி அன்னை தெரசா நகரைச் சேர்ந்த சித செல்லப்பாண்டியன் மகன் ஜெயசிங் (45), எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த கணபதி மகன் மாரிமுத்து (30), முறப்பநாடு கணபதி கோவில் தெருவைச் சேர்ந்த வேலு மகன் செந்தில் முருகன் (33), முள்ளக்காடு பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சேகர் மகன் மனோகரன் (35), பிரையண்ட் நகர் 12வது தெருவைச் சேர்ந்த சக்தி மகன் விஷ்னு (25), முறப்பநாட்டைச் சேர்ந்த முனியசாமி மகன் பாண்டி (20), நெல்லை சமாதான புரத்தைச் சேர்ந்த சுரேஷ் கிருஷ்ணன் மகன் ராஜ்குமார் (26) ஆகிய 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். 



இதில் கைது செய்யப்பட்டுள்ள ஜெபசிங், தூத்துக்குடி முன்னாள் அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியனின் மகன் ஆவார். இந்த சம்பவம் அதிமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட 7பேரையும் போலீசார்  விசாரணைக்காக தூத்துக்குடி அழைத்து சென்றனர். மேலும் கடத்தப்பட்ட லாரி, கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றையும் போலீசார் தூத்துக்குடிக்கு கொண்டு சென்றனர். தூத்துக்குடியில் ரூ.1.15 கோடி மதிப்புள்ள முந்திரி, லாரியுடன் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து

ஆம்Nov 27, 2021 - 09:54:04 PM | Posted IP 173.2*****

இந்த காலத்து 98% அரசியல்வாதிகள் எல்லாம் திருடர்களே ..

ajithNov 27, 2021 - 03:48:37 PM | Posted IP 108.1*****

kaiyil etho vaithirupar ena solvargal

MASSNov 27, 2021 - 02:51:27 PM | Posted IP 108.1*****

super valthukkal

singamNov 27, 2021 - 01:19:43 PM | Posted IP 173.2*****

அரசியலில் பெரிய அளவிற்கு முன்னேற முடியவில்லை.அதனால்?

சிவா கத்தார்Nov 27, 2021 - 11:52:56 AM | Posted IP 162.1*****

arasiyalvathi ellam enna perum panakkararkala illaiye ippati kalvandu vaalum ayokkiyankal than.ithu ellam oru polappu

MATHIYALAGANNov 27, 2021 - 11:51:05 AM | Posted IP 173.2*****

உண்மை செய்திகளை வெளியிட்ட TUTYONLINE க்கு வாழ்த்துக்கள்.

மக்கள்Nov 27, 2021 - 11:11:23 AM | Posted IP 162.1*****

என்ன பிழைப்பு ?? கேவலம்..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory