» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மாயமான வாலிபர் சடலமாக மீட்பு

வெள்ளி 26, நவம்பர் 2021 7:50:01 PM (IST)

தூத்துக்குடியில் மாயமான வாலிபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி வி.இ. ரோடு, அய்யா பிள்ளை காம்பவுண்ட்டைச் சேர்ந்தவர் சுரேஷ் என்ற வள்ளிநாயகம் (33). தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள கல்லூரி நகரிலுள்ள லாரி பதிவு அலுவலகங்களில் வேலை பார்த்துள்ளார். நேற்று இரவு உணவு வாங்கச் சென்றவரை காணவில்லை என்று தேடி வந்துள்ளனர்.

இந்த நிலையில் கல்லூரி நகரிலுள்ள நீர் நிறைந்த பகுதியில் சடலமாக மிதந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி சிப்காட் சப் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes
Nalam PasumaiyagamThoothukudi Business Directory