» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

உடையும் தருவாயில் குளம்: போக்குவரத்தில் மாற்றம்

வெள்ளி 26, நவம்பர் 2021 4:09:19 PM (IST)கடம்பாகுளம் உடையும் தருவாயில் உள்ளதால் பேருந்து மற்றும் வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம், தென்திருப்பேரை அருகே உள்ள கடம்பாகுளம் உடையும் தருவாயில் உள்ளது. தண்ணீர் பந்தல் தரைவழிப் பாலம் அதிக அளவு தண்ணீர் செல்வதை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு சார்பில் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது. பேருந்துகள் தென்திருப்பேரை ஏரல் மற்றும் ஸ்ரீவைகுண்டம்  பாதை வழியாக செல்கிறது. 

குரும்பூர், ஏரல் பாதைகளும் ரோட்டை கடந்து தண்ணீர் செல்வதால் இப்பாதை வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் ஆத்தூரிலிருந்து கீரனூர் தலைவன்வடலி வழியாக ஆறுமுகநேரி திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடிக்கு  சென்று வருகிறார்கள். ஆத்தூரில் இருந்து மேல ஆத்தூர் வழியாகவும் ஏரலுக்கு வாகனங்கள் செல்கின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam Pasumaiyagam


Black Forest Cakes

Thoothukudi Business Directory