» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மழை வெள்ளத்தை வெளியேற்ற நடவடிக்கை : அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!

வெள்ளி 26, நவம்பர் 2021 11:36:11 AM (IST)தூத்துக்குடியில் கனமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் நேரில் ஆய்வு மேற்கொண்டு தண்ணீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 225 சென்டிமீட்டர் மழை பெய்தது இதன்காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பல பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. தூத்துக்குடியில் உள்ள கோரம்பள்ளம் குளம் முழுவதும் நிரம்பி உள்ளது. அதுமட்டுமின்றி காட்டாற்று வெள்ளம் குளத்திற்கு  வந்தவண்ணம் உள்ளது. இதை தொடர்ந்து 24 கண்மாயின் மதகுகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த பணிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். 

இதுபோல் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கனமழையின் காரணமாக மழைநீர் முழுவதும் மருத்துவமனையில் உள்ள பல வார்டுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதை அடுத்து தரைப்பகுதியில் உள்ள நோயாளிகள் அனைவரும் 1வது தளம் இரண்டாவது தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். தற்போது தண்ணீர் சூழ்ந்துள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ உள்ளோர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும் மருத்துவரை சூழ்ந்துள்ள மழை நீரை அகற்றுவதற்கான துரித நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து தற்போது மின் மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆய்வின் போது தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி முதல்வர் நேரு தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்இதுபோல் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து உள்ள பல பகுதிகளில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. ஆனாலும் தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருவதால் பணிகளில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.


மக்கள் கருத்து

K.s. DurairajNov 26, 2021 - 09:31:51 PM | Posted IP 162.1*****

Tuticorin ward no 47 Levengipuram first street is flooded with adjacent streets rain water disposed by three motors( one by corporation other two by individual unauthorisely) in the sewage water canal in first street. Due to this water entered in to many houses Causing severe infections to old aged persons and Children's. Inspite of several complaints through WhatsApp to commissioner and corporate officials concerned no actions taken By the corporation officers. Even photos forwarded to collectors office kept in cold storage. We don't understand whether corruption Officers working for Public or One Individual. If no action taken within 2 days We are going to forward all photos To Hon. C.M. for necessary action Stating that corruption people work against C.M.'s service attitude

knmarNov 26, 2021 - 01:55:39 PM | Posted IP 162.1*****

very nice

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory