» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் தூத்துக்குடி : அமமுக நிர்வாகி நூதன போராட்டம்

வெள்ளி 26, நவம்பர் 2021 11:21:59 AM (IST)தூத்துக்குடியில் தேங்கிய மழைநீரை அகற்ற வலியுறுத்தி அ.ம.மு.க. நிர்வாகி காசிலிங்கம் மழைநீரில் அமர்ந்து குளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். 

தூத்துக்குடியில் நேற்று திடீரென கொட்டித் தீா்த்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீா் குளம்போல தேங்கியுள்ளது. தற்காலிக பேருந்து நிலையத்தில் தண்ணீா் அதிகளவு தேங்கியதால் பயணிகள் நடமாட முடியாமல் தவித்தனா். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நீதிமன்றம், நீதிபதிகள் குடியிருப்பு, ரயில் நிலையம், திரேஸ்புரம் மலா் அரங்கம், ஸ்டேட் பாங்க் காலனி, பிரையன்ட்நகா், சுப்பையாபுரம், மாசிலாமணிபுரம், சிதம்பரநகா் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்து தண்ணீா் காணப்படுவதால் மக்கள் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனா்.

தூத்துக்குடியில் நேற்று பெய்த பலத்த மழையால் மாநகரம் முழுவதும் தண்ணீரில் தத்தளிக்கிறது. பெரும்பாலான இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மழைநீரை அகற்றுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அ.ம.மு.க. 30-வது வார்டு செயலாளர் காசிலிங்கம், தூத்துக்குடி தாலுகா அலுவலகம் முன்பு தேங்கிய மழைநீரில் அமர்ந்து குளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.


மக்கள் கருத்து

வடிவேலு ரசிகன்Nov 27, 2021 - 09:56:14 PM | Posted IP 173.2*****

ஆமாப்பா .. அரசியல்வாதிகள் , தலைவன் எல்லாம் ஏ சி ரூம் இல்

SASINov 26, 2021 - 02:30:46 PM | Posted IP 173.2*****

இவரு ஒருத்தர் மட்டும்தான் அ .ம .க வில் இருக்கிறரர் . ஐயோ பாவம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest Cakes


Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory