» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் பணியிடம் : விண்ணப்பங்கள் வரவேற்பு

வெள்ளி 26, நவம்பர் 2021 10:33:04 AM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக  மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கோவிட் - 19 பேரிடர் மற்றும் கொரோனா நோய்த்தடுப்பு பணிகள் மேற்கொள்வதற்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் கீழ்கண்ட பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் ஆறு மாதங்களுக்கு மட்டும் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்களின் எண்ணிக்கை தொகுப்பூதியம் மற்றும் கல்வித்தகுதி பின்வருமாறு: 

Research Assistant – 2,40,000/- P.M. Passed in Master’s Degree in Chemistry or Microbiology or Physiology or Zoology, 5 years in the Laboratory field / Research field, 

Lab Attendant – 16,500/- P.M. 8th pass.

மேற்கண்ட பணியிடங்கள் 6 மாதங்களுக்கு மட்டும் முற்றிலும் தற்காலிகமாக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. மேலும் இப்பணியிடங்கள் எக்காரணம்கொண்டும் பணிவரன்முறை செய்யப்படவோ அல்லது நிரந்தரம் செய்யப்பட மாட்டாது என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. 

விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் உரிய கல்வி தகுதி தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிலையங்களில் படித்ததற்கான சான்று பெற்றிருக்க வேண்டும் சான்றிதழ்களின் நகல்களுடன் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்கள் (Resume) இவ்வலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :

முதல்வர், அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி, தூத்துக்குடி.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 28 .11.2021

நிர்ணயிக்கப்பட்ட 28.11.2021 பிறகு கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என மாவட்ட சுகாதார சங்க தலைவர் /   மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்,  தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Black Forest CakesThoothukudi Business Directory