» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இல்லம் தேடி கல்வி கலைப்பயண விழிப்புணர்வு நிகழ்ச்சி : அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்

வியாழன் 25, நவம்பர் 2021 8:34:00 PM (IST)



தூத்துக்குடியில் இல்லம் தேடி கல்வி கலைப்பயண விழிப்புணர்வு நிகழ்ச்சியினை அமைச்சர் பெ.கீதாஜீவன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி சிவந்தாகுளம் சாலையில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் இருந்து இல்லம் தேடி கல்வி கலைப்பயண விழிப்புணர்வு நிகழ்ச்சியினை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் இன்று (25.11.2021) கொடியசைத்து துவக்கி வைத்து விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளை பார்வையிட்டார். மாநகராட்சி ஆணையர் சாருஸ்,  முன்னிலை வகித்தார்கள். தொடர்ந்து கலைநிகழ்ச்சி குழுவினருக்கு சீருடைகளை அமைச்சர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் பெ.கீதாஜீவன் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியம் முதலியார்குப்பம் இந்த குடியிருப்பில் 27.10.2021 அன்று துவங்கி வைக்கப்பட்டு இல்லம் தேடி கல்வித் திட்டம் சார்ந்த விழிப்புணர்வு கலைப்பயணம் பரிட்சார்த்த முறையில் 12 மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு குடியிருப்புகளிலும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் இன்றைய தினம் முதல் நிகழ்வாக தூத்துக்குடி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த இல்லம் தேடி கல்வித் திட்டமானது பொதுமக்கள் இடத்திலும் பெற்றோர்கள் இடத்திலும் தன்னார்வலர்கள் இடத்திலும் மற்றும் பள்ளி மாணவர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றதால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி வயது குழந்தைகளும் பயனடையும் வகையில் இத்திட்டத்தினை உடனடியாக அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவு படுத்தும் பொருட்டுள்ளது. இதுநாள் வரை தோராயமாக 1.66 லட்சம் தன்னார்வலர்கள் மாணவர்களுக்கு கல்வி கொடுப்பதற்காக இல்லம் தேடி கல்வி திட்டத்தில் இணைந்துள்ளனர். நமது மாவட்டத்தில் 2162 குடியிருப்புகளில் 4660 கல்வித்தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர்.

எனவே ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற 12 மாவட்டங்களுடன் மீதமுள்ள மற்ற மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தும் விதமாக நமது மாவட்டத்தில் இன்று முதல் 1400 குடியிருப்புகளில் முதல்கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் இன்னும் பதிவு செய்யாத அதிகமான கல்வித் தன்னார்வலர்கள் பதிவு செய்யும் பொருட்டு அதிகமான கல்வித் தன்னார்வலர்கள் இத்திட்டத்தில் இணைந்திட விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

இத்திட்டத்தில் அதிகமான தன்னார்வலர்களை இணைக்கும் பொருட்டு, கடந்த 19.11.2021, 20.11.2021, 21.11.2021 ஆகிய 3 நாட்கள் வாகைக்குளம் மதர்தெரேசா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பயிற்சியில் முறைப்படி பயிற்சி பெற்ற ஒரு குழுவிற்கு 9 உறுப்பினர்கள் அடங்கிய 10 குழுக்கள் மூலம் 90 கலைஞர்கள் அடங்கிய கலைக்குழுவினரால் நமது மாவட்டத்தில் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பள்ளி வேலை நேரத்திலும், மக்கள் வசிக்கும் அனைத்து குடியிருப்புகளிலும் பொதுமக்கள் கூடுமிடத்திலும் மாலை நேரத்திலும் இன்று முதல் கற்றல் இழப்பினை சரிசெய்வதற்காக நமது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய முயற்சியால் கொண்டு வந்துள்ள இத்திட்டத்தினை சரியான முறையில் வெற்றியடைய அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். 

தன்னார்வலர்கள் இணைவதன் மூலம் தேர்ச்சியான நபர்கள் ஒன்று முதல் 5 வரை ஒரு பிரிவாகவும், 6 முதல் 8 வரை மற்றொரு பிரிவாகவும் மாணவர்களுக்கு பொது நிகழ்வுகள், வாழ்வியல் சம்பந்தப்பட்ட தகவல்கள் அறிவியல் சோதனைகள் கலை நிகழ்ச்சிகள் மூலம் மாணவர்களுக்கு ஏற்பட்ட கல்வி தொய்வு மற்றும் இடைநிற்றல் ஆகியவற்றை குறைத்து விட முடியும். 12ம் வகுப்பு முடித்தவர்கள் 1 முதல் 5ம் வகுப்பிற்கும், பட்டப்படிப்பு முடித்தவர்கள் 6 முதல் 8ம் வகுப்பு வரை அக்குடியிருப்பில் உள்ள மாணவர்கள் நிகழ்வுகளை நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பயிற்சி சுடலைமுத்து, உதவி திட்ட அலுவலர் சுப்பிரமணியன், முக்கிய பிரமுகர் ஆனந்தசேகரன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து

samiNov 27, 2021 - 08:12:46 PM | Posted IP 49.20*****

sema comedy

மக்கள்Nov 26, 2021 - 07:30:32 PM | Posted IP 108.1*****

பல ஆண்டுகள் விளங்காத அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வந்ததும் இன்னும் மாறவில்லை , சாக்கடைகள் உயர்ந்து வருகிறது, அவங்க பிசினஸ் மட்டும் உயர்ந்து வருகிறது ...

ஆமாNov 26, 2021 - 07:28:41 PM | Posted IP 108.1*****

அரசியல்வாதிகள் பணம் பதவி வெறி பிடித்தவர்கள் ...

ராமநாதபூபதிNov 26, 2021 - 09:32:22 AM | Posted IP 108.1*****

இங்கே மழை பெய்ஞ்சு ஊர் நாறிப்போச்சு. இதுல கொடியை பிடிச்சி ஆட்டிகிட்டு இருக்கீங்க. மழைநீரை வடியவைக்கும் முயற்சியில் விரைவில் ஈடுபடவேண்டும். இல்லையென்றால் மாநகராட்சி தேர்தலில் பொழப்பு நாறிரும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory