» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்திற்கு கனமழை ரெட் அலர்ட் : பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

வியாழன் 25, நவம்பர் 2021 7:33:32 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்திற்கு கனமழை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு வங்க கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போதைய சூழ்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுவதற்கு வாய்ப்பில்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆனால் ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில் ஆரஞ்ச் எச்சரிக்கையும் விடுத்திருந்தது.

இதற்கிடையில் தென்தமிழகத்தில் மதியம் கனமழை பெய்தது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் வெளுத்து வாங்கியது. தூத்துக்குடியில் 16 செ.மீட்டர் மழை பதிவானது. திருச்செந்தூரில் 18 செ.மீட்டர் மழை பதிவானது. தற்போதும் கனமழை பெய்து வருகிறது. இதனால் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. தற்போது, கூடுதலாக ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தொடர் மழையின் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (26.11.2021) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham HospitalThoothukudi Business Directory