» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆதிச்சநல்லூர் முன்னோர்களின் கலாச்சார சொத்து : கல்லூரி மாணவ, மாணவிகள் பெருமிதம்

செவ்வாய் 23, நவம்பர் 2021 3:00:18 PM (IST)ஆதிச்சநல்லூர் எங்கள் முன்னோர்களின் பராம்பரிய கலாச்சார சொத்து என பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி வரலாற்றுத் துறை மாணவ, மாணவிகள் கூறினர்.

உலக பாரம்பரிய வாரவிழா நவம்பர் 19ம் முதல் 25ம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்காக முதல் கட்டமாக அகழாய்வு பணிகள் நடந்து வரும் இடத்தினை பார்வையிடப் பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி மாணவ மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் வருகை தந்தனர்.

அவர்கள் புளியங்குளம் பகுதியில் கட்டப்பட்டுள்ள முதுமக்கள் தாழி தகவல் மையத்தை பார்வையிட்டனர். அகழாய்வு பணிகள் குறித்து அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் விளக்கமளித்தார். அவர் கூறும் போது ஆதிச்சநல்லூர் மிகவும் சிறப்புப் பெற்றது. இது வரை நடந்த அகழாய்வில் மாநில அரசு மூலம் நாங்கள் செய்ய அகழாய்வு மிகவும் சிறப்பு வாய்ந்தது. முதல் முறையாக நாங்கள் இங்கு வாழ்ந்த மக்களின் வாழ்விடத்தினை தேடினோம். இதற்காகப் பல குழிகள் போடப்பட்டு வெற்றியும் கண்டுள்ளோம். 

அதோடு மட்டுமல்லாமல் 10 ஆயிரம் வருடங்கள் பழமையான பெருங்கற்கால கருவிகளையும் இந்த ஆய்வில் கண்டு பிடித்துள்ளோம்£ம். இங்குக் கிடைத்த பல அபூர்வ பொருள்கள் நமது முன்னோர்களின் பண்பாட்டை அறிந்து கொள்ள உதவியாக இருந்துள்ளது. தற்போது இங்கு நடந்த அகழாய்வு மூலம் எடுத்த பொருள்களை ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். விரைவில் அதற்கான முடிவுகள் வரும். அந்த முடிவுகள் நிச்சயம் ஆதிச்சநல்லூரை மீண்டும் உலக அரங்கில் நிலை நிறுத்தும் என்றுகூறினார்.

இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, சிவகளை ஆசிரியர் மற்றும் ஆய்வு மாணவர் மாணிக்கம், கந்தசுப்பு, முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் சங்கர்கணேஷ், மணிகண்டன் ஆகியோர் பேசினர். வரலாற்றுத் துறைத் தலைவர் நஷீர் அகமது, துணைத் தலைவர் முகைதீன் பாதுஷா, பேராசிரியர் அப்துல் அஷீஸ், சாகுல், ஜெமி, உள்படப் பலர் கலந்துகொண்டனர்.

அதன் பின் 2020-21ல் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு செய்து ஆய்வுக்கு வைக்கப்பட்டுள்ள பொருள்களை மாணவர்கள் ஆர்வத்துடன் பார்த்தனர். தொடர்ந்து ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் நடந்து வரும் அகழாய்வு பணிகளில் கண்டுபிடிக்கப்பட்ட 15க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், சங்ககால வாழ் விடப்பகுதிகள், ஆங்கிலேயர்கள் காலத்தில் உருவான சுண்ணாம்பு தளம் போன்றவற்றைப் பார்வையிட்டனர். 

தொல்லியல் ஆய்வாளர் முத்துக்குமார் ஆய்வுகள் குறித்து விளக்கமளித்தார்.மாணவ மாணவிகள் நமது முன்னோர்களின் பெருமை மிகு இடங்களான ஆதிச்சநல்லூருக்கு வருகை தந்தது எங்களுக்குப் பெருமையாக உள்ளது. குறிப்பாகப் பலர் வரலாற்றைத் தொலைத்து விட்டு நிர்க்கதியாக நிற்கிறார்கள். ஆனால் தமிழனின் வரலாறு, தொன்மை மிகச்சிறப்பாக விளங்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கு ஆதிச்சநல்லூர் தான் சாட்சி என்றனர். அதன் பின் அவர்கள் சிவகளை மற்றும் கொற்கை ஆகிய இடங்களுக்குச் சென்றனர்.


மக்கள் கருத்து

kumarNov 23, 2021 - 03:36:42 PM | Posted IP 173.2*****

ulagilaye thamilanin panpadu, kalacharam, valviyal muraithan siranthathu matrum palamayanthu. ulagame nam bharatha kalacharathai nokki varum kalam viraivil varum.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Nalam PasumaiyagamThoothukudi Business Directory