» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் 9 இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்

ஞாயிறு 21, நவம்பர் 2021 7:56:41 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றிய 9 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் டவுன் இன்ஸ்பெக்டர் பட்டாணி, நாசரேத் காவல் நிலையத்திற்கும், தூத்துக்குடி அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்திற்கும், ஆழ்வார்திருநகரி இன்ஸ்பெக்டர் ஜூடி அமலாக்கப்பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

மேலும், நாசரேத் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தூத்துக்குடி தெர்மல் நகர் காவல் நிலையத்திற்கும், நெல்லை மாவட்டம் சுத்தமல்லி இன்ஸ்பெக்டர் அனிதா, மாசார்பட்டி காவல் நிலையத்திற்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் இன்ஸ்பெக்டர் ஜேசுபாதம், தூத்துக்குடி தெற்கு குற்றப் பிரிவுக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். காத்திருப்பு பட்டியலில் இருந்த இளவரசு விளாத்திகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். மாசார்பட்டி இன்ஸ்பெக்டர் கோகிலா, சுத்தமல்லி காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Nalam PasumaiyagamBlack Forest CakesThoothukudi Business Directory