» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வேளாண் சட்டங்கள் வாபஸ்: காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

வெள்ளி 19, நவம்பர் 2021 12:14:56 PM (IST)3 வேளாண் சட்டங்களை மத்திய பாஜக அரசு திரும்பப் பெறுவதை வரவேற்று தூத்துக்குடியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். 

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லியில் கடந்த ஓராண்டாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது, 3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுவதாக அறிவித்தார். இதனை வரவேற்று தமிழ்நாட்டின் பல பகுதிகளில் விவசாயிகள், காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். 

இந்நிலையில், தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் வஉசி மார்க்கெட் முன்பு அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். மத்திய அரசின் இந்த நிலைப்பாடு காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த வெற்றி என்று கோஷமிட்டனர். 

இதில் மண்டல தலைவர்கள் ஜசன்சில்வா, சேகர், பிரபாகரன், செந்தூர்பாண்டி, முன்னாள் மாவட்ட தலைவர் அருள், முன்னாள் மாமன்ற உறுப்பினர் சந்திரபோஸ், மாவட்ட துணை தலைவர்கள் அருணாச்சலம், பிரபாகர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெபராஜ், மாவட்ட எஸ்சி/எஸ்டி பிரிவு மாவட்ட தலைவர் ராஜாராம், மாவட்ட விவசாய பிரிவு தலைவர் பாலசுப்பிரமணியன், மாவட்ட சேவாதளம் தலைவர் ராஜா, வார்டு தலைவர்கள் வாசிராஜன், சண்முகசுந்தரம், ராஜா, மைக்கேல், முத்துவேல், உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்இதுபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ச்சுணன் தலைமையில் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.பி.ஆறுமுகம், மாநகர் செயலாளர் தா.ராஜா, ஒன்றிய செயலாளர் க.சங்கரன்,  மாவட்டக்குழு உறுப்பினர்கள் காசி, எம்.எஸ்.முத்து, மாநகர் குழு உறுப்பினர் ஆறுமுகம், முத்து கிருஷ்ணன், காஸ்ட்ரோ, மாணவர் சங்க மாவட்ட செயலாளர் மாரி, மாவட்ட தலைவர் கார்த்தி, மாவட்டகுழு உறுப்பினர் ஶ்ரீ நாத், விக்னேஷ், சுயம்பு, கிஷோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

kumarNov 19, 2021 - 03:50:44 PM | Posted IP 162.1*****

deepavaliku saravedi vedikka koodathu endru arasum, kavalthurayinarum sonnargal? ippothu ivargaluku eppadi anumathi kidaithathu?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam PasumaiyagamBlack Forest Cakes
Thoothukudi Business Directory