» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மதுரை கோட்டத்தில் 6 முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில்கள் இயக்க ஏற்பாடு

சனி 6, நவம்பர் 2021 10:16:27 PM (IST)

திருநெல்வேலி - தூத்துக்குடி சிறப்பு விரைவு ரயில் உட்பட மதுரை கோட்டத்தில் ஆறு முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு: மதுரை - பழனி மற்றும் பழனி - கோயம்புத்தூர் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு விரைவு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி வண்டி எண் 06480 மதுரை - பழனி சிறப்பு விரைவு ரயில் மதுரையில் இருந்து நவம்பர் 11 முதல் மறு அறிவிப்பு வரும் வரை காலை 07.20 மணிக்கு புறப்பட்டு காலை 10.10 மணிக்கு பழனி சென்று சேரும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 06479 பழனி - மதுரை சிறப்பு விரைவு ரயில் பழனியிலிருந்து நவம்பர் 10 முதல் மறு அறிவிப்பு வரும் வரை மாலை 04.45 மணிக்கு புறப்பட்டு இரவு 07.40 மணிக்கு மதுரை வந்து சேரும்.

பழனி - கோவை சிறப்பு ரயில்

வண்டி எண் 06463  கோயம்புத்தூர் - பழனி சிறப்பு விரைவு ரயில் நவம்பர் 10 முதல் மறு அறிவிப்பு வரும் வரை கோயம்புத்தூரில் இருந்து மதியம் 02.10 மணிக்கு புறப்பட்டு மாலை 04.40 மணிக்கு பழனி வந்து சேரும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 06462 பழனி - கோயம்புத்தூர் சிறப்பு விரைவு ரயில் நவம்பர் 11 முதல் மறு அறிவிப்பு வரும் வரை பழனியில் இருந்து காலை 11.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 02.00 மணிக்கு கோயம்புத்தூர் சென்று சேரும்.

மதுரை - பழனி மற்றும் பழனி - கோயம்புத்தூர் ரயில்கள் இணைப்பு ரயில்களாக செயல்படும். மதுரையில் இருந்து பழனிக்கு புறப்படும் ரயில் அப்படியே பழனி - கோயம்புத்தூர் ரயிலாகவும் செயல்படும். அதேபோல கோயம்புத்தூரில் இருந்து புறப்படும்  பழனி சிறப்பு ரயில் அப்படியே பழனி - மதுரை சிறப்பு ரயிலாகவும் செயல்படும். இந்த ரயில்கள் அந்தப் பகுதியில் அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.

திருநெல்வேலி தூத்துக்குடி சிறப்பு விரைவு ரயில்

வண்டி எண் 06668 திருநெல்வேலி - தூத்துக்குடி விரைவு சிறப்பு ரயில் திருநெல்வேலியிலிருந்து காலை 07.35 மணிக்கு புறப்பட்டு காலை 09.25 மணிக்கு தூத்துக்குடி சென்று சேரும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 06667 தூத்துக்குடி - திருநெல்வேலி சிறப்பு விரைவு ரயில் தூத்துக்குடியிலிருந்து மாலை 06.00 மணிக்கு புறப்பட்டு இரவு 08.15 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும். இந்த ரயில்கள் நவம்பர் 8 ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை இயக்கப்படும். விரல்கள் இந்த ரயில்கள் அந்தப் பகுதியில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.

திருநெல்வேலி செங்கோட்டை விரைவு சிறப்பு ரயில்

வண்டி எண் 06685 திருநெல்வேலி - செங்கோட்டை சிறப்பு விரைவு ரயில் திருநெல்வேலியிலிருந்து காலை 07.00 மணிக்கு புறப்பட்டு காலை 09.15 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும். மறுமார்க்கத்தில்  வண்டி எண் 06686 செங்கோட்டை - திருநெல்வேலி சிறப்பு விரைவு ரயில் செங்கோட்டையிலிருந்து மாலை 05.50 மணிக்கு புறப்பட்டு இரவு 08.10 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். இந்த ரயில்கள் நவம்பர் 10 முதல் மறு அறிவிப்பு வரும் வரை இயக்கப்படும். இந்த ரயில் அந்த பகுதியில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.

திருநெல்வேலி - திருச்செந்தூர் சிறப்பு விரைவு ரயில்

வண்டி எண் 06673 திருநெல்வேலி -  திருச்செந்தூர் விரைவு சிறப்பு ரயில் திருநெல்வேலியிலிருந்து காலை 07.20 மணிக்கு புறப்பட்டு காலை 09.05 மணிக்கு திருச்செந்தூர் சென்று சேரும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 06678 திருச்செந்தூர் - திருநெல்வேலி விரைவு சிறப்பு ரயில் திருச்செந்தூரிலிருந்து மாலை 06.05 மணிக்கு புறப்பட்டு இரவு 07.40 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். இந்த ரயில்கள் நவம்பர் 10 முதல் மறு அறிவிப்பு வரும் வரை இயக்கப்படும். இந்த ரயில்கள் அந்தப் பகுதியில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.

காரைக்குடி - விருதுநகர் விரைவு சிறப்பு ரயில்

வண்டி எண் 06886 விருதுநகர் - காரைக்குடி விரைவு சிறப்பு ரயில் சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் விருதுநகரிலிருந்து காலை 06.20 மணிக்கு புறப்பட்டு காலை 09.35 மணிக்கு காரைக்குடி சென்று சேரும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 06885 காரைக்குடி - விருதுநகர் சிறப்பு விரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் மாலை 06.00 மணிக்கு புறப்பட்டு இரவு 09.10 மணிக்கு விருதுநகர் சென்று சேரும். இந்த ரயில்கள் நவம்பர் 10 முதல் மறு அறிவிப்பு வரும் வரை இயக்கப்படும். இந்த ரயில்கள் அந்தப் பகுதியில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital


Thoothukudi Business Directory