» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி இளைஞர் பெருமன்றம் ஆர்ப்பாட்டம்

செவ்வாய் 26, அக்டோபர் 2021 3:03:55 PM (IST)



நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி தூத்துக்குடியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும், பகத்சிங் தேசிய வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும், அரசு மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும், பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் விலையைக் குறைத்திட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதை நிறுத்த வேண்டும்.
வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வே்ணடும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி சிதம்பரநகர் மெயின் ரோட்டில், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சந்தனசேகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் சிபிஐ மாவட்ட செயலாளர் அழகுமுத்து பாண்டியன், ஏஐடியூசி மாவட்ட செயலாளர் கிருஷ்ணராஜ், சிபிஐ மாநகர செயலாளர் ஞானசேகர், மாடசாமி, சுப்ரமணியன், இளைஞர் பெருமன்றம் ராஜாசிங், சோலையப்பன், பெருமாள், காளிஸ்வரன், ஜீவா, பலவேசம், சுப்புத்துரை, ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory