» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பைக் மீது அரசு பஸ் மோதல்: 2பேர் பலி

செவ்வாய் 26, அக்டோபர் 2021 12:19:30 PM (IST)

தூத்துக்குடி அருகே மோட்டார் பைக் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த 2பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

தூத்துக்குடி அருகேயுள்ள கீழதட்டபாறை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பேச்சிமுத்து மகன் கொம்புராஜ் (50), பாலைய்யா மகன் கொம்பையா (37). இருவரும் கூலித் தொழிலாளர்கள். நேற்று இரவு வேலை முடிந்து ஒரே பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். தூத்துக்குடி - நெல்லை மெயின் ரோட்டிலிருந்து, தட்டபாறை விலக்கு ரோட்டில் திரும்பியபோது நெல்லையில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்த அரசு பஸ் பைக் மீது மோதியது. 

இந்த கோர விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதில் கொம்புராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொம்பையா சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப் பதிந்து, பஸ் டிரைவர் தூத்துக்குடி கோரம்பள்ளத்தைச் சேர்ந்த ஐயப்பன் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து

ஜெயபால்Oct 29, 2021 - 08:22:13 AM | Posted IP 162.1*****

வேகமாக செல்லும் வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த நிறந்திர பேரிக்கட் அமைக்க ஏற்பாடு செய்யுங்கள்

.......Oct 27, 2021 - 05:29:50 PM | Posted IP 162.1*****

Appa

KomburajOct 27, 2021 - 05:26:29 PM | Posted IP 162.1*****

Appa

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes

Nalam Pasumaiyagam


Thoothukudi Business Directory