» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தனியே வசிக்கும் பெண்களுக்கு ரேஷன் கார்டு வழங்க தமிழக அரசு உத்தரவு!

செவ்வாய் 26, அக்டோபர் 2021 11:38:07 AM (IST)

கணவனால் கைவிடப்பட்ட, மணவாழ்வு முறிந்த பெண்களுக்கு, புதிய ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கணவனால் நிராதரவாக கைவிடப்பட்டு, மணவாழ்வு முறிந்து தனியாக வசிக்கும் பெண்களின் பெயர், கணவனின் ரேஷன் கார்டில் இடம் பெற்றுள்ளது. அந்த பெண்களின் பெயரை நீக்க, கணவர் முன்வருவதில்லை. நீதிமன்ற விவாகரத்து சான்று போன்ற ஆவணங்கள் இல்லாததால், சம்பந்தப்பட்ட பெண்களுக்கு ரேஷன் கார்டு வழங்கப்படுவதில்லை.

இதனால், அவர்களது உணவு பாதுகாப்பு பாதிக்கப்படுவது, அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. இத்தகைய பெண்களின் ஆதார் எண், கணவரின் ரேஷன் கார்டில் இணைக்கப்பட்டு இருந்தால், அவரது பெயரை சம்பந்தப்பட்ட அலுவலர், தன் அதிகாரத்தை பயன்படுத்தி, குடும்ப தலைவரின் அனுமதியின்றி ரேஷன் கார்டில் இருந்து நீக்க வேண்டும். நீதிமன்ற விவாகரத்து சான்று போன்ற ஆவணங்கள் ஏதும் கேட்காமல், அந்த பெண்ணிற்கு புதிய ரேஷன் கார்டு வழங்க வேண்டும் என, உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்களுக்கு, உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam


Black Forest Cakes


Thoothukudi Business Directory