» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் 25பேருக்கு பாராட்டு சான்றிதழ் : எஸ்பி ஜெயக்குமார் வழங்கல்!

செவ்வாய் 26, அக்டோபர் 2021 11:05:09 AM (IST)தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் 25பேருக்கு எஸ்பி ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் முத்து மற்றும் காவலர் சத்ரியன், தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வனிதா, தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சங்கர், தலைமை காவலர் சுதாகர் பால்சிங், ஆண்டி மற்றும் முதல் நிலை காவலர் அனந்தகுமார், சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன், 

முறப்பநாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் இன்னோஸ்குமார் மற்றும் முதல் நிலை காவலர் சரவணகுமார், விளாத்திகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் காசிலிங்கம், சங்கரலிங்கபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் பால்ராஜ், விளாத்திகுளம் காவல் நிலைய முதல் நிலை காவலர் மகேந்திரன் மற்றும் காடல்குடி காவல் நிலைய முதல் நிலை காவலர் முத்துகாமாட்சி,முறப்பாநாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் மற்றும் தனிப்பிரிவு காவலர் சேகர்,

விளாத்திகுளம் உட்கோட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் சேகர், நாலாட்டின்புதூர் காவல் நிலைய தலைமை காவலர் ஜெயலெட்சுமி, மாவட்ட தனிப்பிரிவு தலைமை காவலர்கள் ஜோஸ் ஜூடு லியோ, சுரேஷ்குமார் மற்றும் துரைபாண்டியன், தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய தலைமை காவலர் சாமிநாத், ஆயுதப்படை காவலர் சுந்தரவேல் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும், 2 காவல் ஆய்வாளர் உட்பட 25பேரின் சிறந்த சேவையை பாராட்டி மாவட்ட கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வின் போது மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து உடனிருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes
Nalam Pasumaiyagam

Thoothukudi Business Directory