» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 40ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல் : 9பேர் கைது

சனி 9, அக்டோபர் 2021 11:41:34 AM (IST)

தூத்துக்குடியில் 40ஆயிரம் லிட்டர் கலப்பட டீசலை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 9பேர் கைது  செய்யப்பட்டுள்ளனர். 

தூத்துக்குடி முத்தையாபுரம் அய்யன் கோவில் தெருவில் உள்ள ஒரு குடோனில் கலப்பட டீசல் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து டவுண் டிஎஸ்பி கணேஷ் உத்தரவின் பேரில், முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன், சப் இன்ஸ்பெக்டர் முத்துமாலை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று அங்குள்ள குடோனில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 4 லோடு ஆட்டோக்களில் 33 பேரல்களிலும், ஒரு டேங்கர் லாரியிலும் கலப்பட டீசல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த மொத்தம் 39ஆயிரத்து 400 லிட்டர் கலப்பட டீசல், 4 லோடு ஆட்டோக்கள், ஒரு டேங்கர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.  

இது தொடர்பாக தூத்துக்குடி அண்ணா நகரைச் சேர்ந்த தியாகராஜன் மகன் பவுல் அந்தோணி (34), பிச்சைக்கனி மகன் கொழுந்துவேல் அய்யன் (31), திரேஸ்புரத்தைச் சேர்ந்த பொன்ராஜ் மகன் பாண்டி (36), முள்ளக்காடு தெற்கு தெருவைச் சேர்ந்த பால்ராஜ் மகன் சதீஷ் (38), முத்தையாபுரம் ஜேஎஸ் நகர் 2வது தெருவைச் சேர்ந்த கல்யாண சுந்தரம் மகன் பிரசாந்த் (29), பாரதி நகரைச் சேர்ந்த சண்முகவேல் மகன் பாலாஜி (28), திரேஸ்புரத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் விஜயன் (30), ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்த அல்பர்ட் மகன் பிரவீன் (25), மயிலாடுதுறை பரசலூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் செல்வகுமார் (45), ஆகிய 9பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குடோன் உரிமையாளரான திரேஸ்புரத்தைச் சேர்ந்த இமானுவேல் மகன் ரவி (40) என்பவரை தேடி வருகின்றனர். தூத்துக்குடியில் சுமார் 40ஆயிரம் லி்ட்டர் கலப்பட டீசல் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து

அப்படியாOct 9, 2021 - 08:51:45 PM | Posted IP 108.1*****

மீன்களில் கலப்படம் இருக்கா சோதித்து பாருங்க அதுவே முக்கியம் ..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Nalam PasumaiyagamThoothukudi Business Directory