» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காதல் மனைவியை கொலை செய்த ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

செவ்வாய் 5, அக்டோபர் 2021 3:06:12 PM (IST)

காதல் மனைவியை கொலை செய்த இசைப் பள்ளி ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. 

தென்காசி மாவட்டம் சிவகிரி அர்ஜுணன் மகன் ஜூலி பாரத் (41), நெல்லையில் உள்ள இசைப் பள்ளியின் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் விளாத்திகுளத்தைச் சேர்ந்த அருணாதேவி (27) என்பவரை கடந்த 2012ல் காதல் திருமணம் செய்து கொண்டார். இருவரும் விளாத்திகுளத்தில் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஜெயபிரகாஷ் என்ற மகன் உள்ளார். 

இந்நிலையில் ஜூலி பாரத் மனைவியை தனிக்குடித்தனத்திற்கு அழைத்துள்ளார். ஆனால் அவர் ஏற்க மறுத்து விட்டாராம். இதனால் கடந்த 07.11.2015ல் நடந்த தகராறில் ஜூலி பாரத் அருணாதேவியை குத்திக் கொலை செய்துள்ளார். இதையடுத்து போலீசார் ஜூலி பாரத்தை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பாண்டியராஜன், ஜூலி பாரத்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் சுபாஷிணி ஆஜரானாார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Nalam Pasumaiyagam








Thoothukudi Business Directory