» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி பலி

ஞாயிறு 26, செப்டம்பர் 2021 9:51:33 AM (IST)

பாவூர்சத்திரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

தென்காசி  மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே ராயப்பநாடானூர் அருந்ததியர் தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (55). இவர் அங்குள்ள ஒருவரது தோட்டத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர்  இரவில் தோட்டத்தில் சாப்பிட்டு விட்டு, கிணற்றின் அருகில் கை கழுவ சென்றார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்து இறந்தார்.

இதுகுறித்து ஆலங்குளம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, கணேசனின் உடலை மீட்டனர்.  பாவூர்சத்திரம் போலீசார், கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு அனுப்பி வைத்து  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Nalam PasumaiyagamThoothukudi Business Directory