» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ரூ.33.4 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மைய கட்டிடம்: அமைச்சர், எம்பி திறந்து வைத்தனர்!

சனி 25, செப்டம்பர் 2021 4:49:56 PM (IST)தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.33.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடத்தினை கனிமொழி எம்பி,  அமைச்சர் பெ.கீதாஜீவன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

தூத்துக்குடி மாநகராட்சி உட்பட்ட சுப்பையா பூங்கா பகுதியில் மாநகராட்சி சீர்மிகு நகர அபிவிருத்தம் திட்டத்தின் கீழ் ரூ.33.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடத்தினை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி  மற்றும் சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் ஆகியோர் இன்று (25.09.2021) திறந்து வைத்தனர். மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில் ராஜ், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ,  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 
நிகழ்ச்சியி்ல் கனிமொழி எம்பி பேசியதாவது: தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் வளரும் குழந்தைகள் சிறு வயதிலேயே கல்வியாற்றலில் சிறந்து விளங்கும் வகையில் குழந்தைகளுக்கு மதிய ஊட்டச்சத்துடன் கூடிய உணவு வழங்கும் வகையில் இரண்டு அங்கன்வாடி மையங்கள் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் தலா ரூ.16.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இந்த அங்கன்வாடி மையத்தினை இன்றைய தினம் திறந்து வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். 

சிறு குழந்தைகள் எளிதில் புரிந்துகொள்ளும் வண்ண சுவர்களில் வர்ணங்களால் கணிதம், அறிவியல், விளையாட்டு சார்ந்த குறியீடுகள், சிறு குழந்தைகள் அமர்வதற்க வர்ணம் பூசப்பட்ட நவீன இருக்கைகள், நவீன மயமாக்கப்பட்ட வருகை பதிவேடு, கணிணி வசதி ஆகியவை அமைக்கப்பட்டு குழந்தைகள் அனைவரும் பயன்பெறும் வகையில் உள்ளது. மேலும் எதிர் வரும் காலங்களில் அனைத்து சந்ததியினரும் படித்து முன்னேறும் வகையில் இந்த அங்கன்வாடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. 

பொதுமக்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளை நன்கு படிக்க வைத்து அவர்களின் எதிர்காலத்தை நல்லவிதமாக அமைத்து கொடுப்பதன் மூலம் அவர்களின் வாழ்வில் முன்னேற்றம் அடைந்து சமுதாயத்தில் உயர் நிலையில் உள்ள நல்ல உத்யோகத்தில் இருக்க வாய்ப்பாக அமையும். தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து தரப்படும் என தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாநகராட்சி நிர்வாக பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் (சமூக நலத்துறை) தனலட்சுமி, உதவி பொறியாளர் சரவணன், முக்கிய பிரமுகர் ஜெகன் பெரியசாமி, ஜீவன் மற்றும் அலுவலர்கள், மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes


Nalam Pasumaiyagam

Thoothukudi Business Directory