» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் திடீர் மரணம்!

சனி 25, செப்டம்பர் 2021 4:45:11 PM (IST)

திருச்செந்தூரில் பஸ் டெப்போ ஊழியர் திடீரென உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், வடக்கு ஆத்தூரை சேர்ந்தவர் சாந்தகுமார் (56). இவர் திருச்செந்தூர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் டெக்னீசியனாக பணிபுரிந்து வந்தார். இன்று அதிகாலை அவர் பேருந்துகளுக்கு டீசல் நிரப்பி கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து

adaminSep 25, 2021 - 06:28:56 PM | Posted IP 173.2*****

சரியான இரவு உறக்கம் இன்மை அணைத்து நோய்களுக்கும் காரணம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam
Black Forest Cakes
Thoothukudi Business Directory