» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஜனாதிபதியிடம் விருது பெற்ற காமராஜ் கல்லூரி பேராசிரியருக்கு வரவேற்பு

சனி 25, செப்டம்பர் 2021 3:59:21 PM (IST)குடியரசு தலைவரிடம் விருது பெற்ற காமராஜ் கல்லூரி பேராசிரியர் மற்றும் கல்லூரி முதல்வருக்கு தூத்துக்குடியில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

சிறந்த நாட்டு நல பணித்திட்டக்காக குடியரசு தலைவரிடம் விருது பெற்ற காமராஜ் கல்லூரி வரலாற்றுத் துறை தலைவர் மற்றும் நாட்டு நல பணித்திட்ட அதிகாரி  தேவராஜ், கல்லூரி முதல்வர் நாகராஜ் ஆகியோருக்கு தூத்துக்குடியில் கல்லூரி சார்பில் வரவேற்பு விழா நடைபெற்றது. விழாவில் பேசிய கல்லூரி முதல்வர், குடியரசு தலைவரின் விருது அனைவரின் கூட்டு முயற்சியால் கிடைத்த வெற்றி என்று குறிப்பிட்டார். பேராசிரியர் தேவராஜ் பேசுகையில் "விருதினை பெறுவதற்கு முழுக்காரணமான நாட்டு நல பணித்திட்ட மாணவர்கள், நாட்டு நல பணித்திட்ட அலுவலர்கள் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள், ஊடகத்துறை நண்பர்கள் இன்னும் பலரது முயற்சியால் கிடைக்கப்பெற்றது" என்றார். 

விழாவில் காமராஜ் கல்லூரியின் செயலாளர் சோமு சோமசுந்தரம், துணைத் தலைவர் நடராஜன், கல்லூரியின் பொருளாளர் ரா.முத்துச்செல்வம், காரப்பேட்டை நாடார் மகமை செயலாளர் பா.விநாயகமூர்த்தி, பாரத ரத்னா காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயலாளர் க.ஆனந்தராஜ், காமராஜ் கல்லூரியின் பொறுப்பு முதல்வர் கோ.நாராயணசாமி, காமராஜ் கல்லூரியின் நிர்வாக குழு உறுப்பினர்கள், காமராஜ் கல்லூரியின் பேராசிரியர்கள், அலுவலர்கள், காமராஜ் கல்லூரி சுயநிதி பாடப்பிரிவு பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் பாரத ரத்னா காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டு பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். 


மக்கள் கருத்து

K.ganeshanSep 25, 2021 - 08:46:16 PM | Posted IP 173.2*****

வாழ்த்துக்கள்.💐🌹🙏

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest Cakes

Nalam Pasumaiyagam

Thoothukudi Business Directory