» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சாலையில் திடீர் வேகத்தடை: கிராம மக்கள் எதிர்ப்பு

சனி 25, செப்டம்பர் 2021 9:01:13 AM (IST)சாத்தான்குளம் அருகே செட்டிவிளையில் இருந்து குட்டம், தோப்புவிளை சாலையில் திடீரென அனுமதியின்றி வேகத்தடை அமைக்கப்பட்டதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் ஒன்றியம் திருப்பணி புத்தன்தருவை ஊராட்சிக்குள்பட்ட அதிசய மணல் மாதா ஆலயம் தென்புறம் செட்டிவிளையில் இருந்து குட்டம், தோப்புவிளைக்கு செல்லும் சாலை திருநெல்வேலி மாவட்டம் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் இணைப்பு சாலையாக உள்ளது. அதில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட சாலையில் தனி நபர் ஒருவர் புதிதாக கடை திறந்ததையொட்டி சாலையின் முகப்பில் இரு புறமும் தொடர்ச்சியாக இரண்டு மிகப்பெரிய வேகத்தடை மூலம் அமைக்கப்பட்டுள்ளதாம். அந்த வேகத்தடை சிமெண்ட் மற்றும் மிகப்பெரிய கற்களை கொண்டு மிக உயரமாக அரசின் எவ்வித அனுமதியும் பெறாமல் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

அந்த வேகத்தடையில் இரு சக்கர வாகனம் மற்றும் கார் செல்லும் போது வேகத்தடையில் உரசி பழுதடைந்து விடுகிறது. இரு சக்கர வாகனத்திலிருந்து கீழேவிழுந்து காயமடையும் நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து வேகத்தடை அமைத்தவரிடம் கூறுகையில் கருத்து மோதல் ஏற்படும் சூழல் ஏற்படுகிறது. இதுகுறித்து உள்ளாட்சி அமைப்பிடம் தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் பார்வையிட்டு மிகவும் உயரமாக அமைக்கப்பட்டுள்ள வேகதடையை அகற்றி, மக்களுக்கு தேவையான அளவு வாகன ஓட்டிகள் செல்லும் வகையில் வேகதடை அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து

இன்னும் அகற்றவில்லைOct 1, 2021 - 08:05:56 PM | Posted IP 108.1*****

தற்போது வரை அந்த வேகத்தடையை அகற்றவில்லை. அரசு உயர் அதிகாரிகள் எங்கே...

ஆமாSep 25, 2021 - 10:34:50 AM | Posted IP 173.2*****

நிறைய பேர் தூத்துக்குடியில் சிறிய தெருவிலும் நிறைய வேகத்தடைகள் அமைத்தாங்க, வேகத்தடையால் முதியோர்கள் , வயதானவர்கள் செல்லும் சிரமம் , வாகனஓட்டிகள் முதுகு வலி ஏற்படும், ரோடு எல்லாம் அவங்க அவங்க அப்பன் வீடு சொத்தா?? எங்கு வேகத்தடை தேவைப்படுகிறதா அங்கு தான் அமைக்க வேண்டும், இனி வேகத்தடை அமைக்க அரசு அனுமதி பெற்று தான் அமைக்க வேண்டும்...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam PasumaiyagamBlack Forest Cakes

Thoothukudi Business Directory