» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டியில் எடப்பாடி பழனிச்சாமிக்கு வரவேற்பு

வெள்ளி 24, செப்டம்பர் 2021 12:39:31 PM (IST)தென்காசி மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் வழியில் கோவில்பட்டியில்  எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம்,  கோவில்பட்டியில் இனாம்மணியாச்சி விலக்கு அருகே தென்காசி மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் வழியில், தமிழக முன்னாள் முதல்வரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலருமான கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் ஆகியோர் தலைமையில்வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர், அங்கு அமைக்கப்பட்ட பந்தலில் வைக்கப்பட்டிருந்த சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்திற்கு எடப்பாடி கே. பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி செயலர் சீனிராஜ் ஏற்பாட்டில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அமுமுக வழக்கறிஞர் அணியை சேர்ந்த சங்கர் கணேஷ். கிழக்கு ஒன்றிய இணைச் செயலர் கோமதிநாயகம் உள்பட 150க்கும் மேற்பட்ட பிற கட்சிகளை சேர்ந்தவர்கள் எடப்பாடி கே.பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

இந்நிகழ்ச்யில் தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி குழு தலைவி சத்யா, பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலர் சீனிராஜ், ஒன்றியச் செயலர்கள் வினோபாஜி, அய்யாத்துரை பாண்டியன், வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் சிவபெருமாள், ஜெயலலிதா பேரவை பொருளாளர் வேலுமணி, செயலர் செல்வகுமார், கட்சியின் நகர செயலர் விஜய பாண்டியன் உள்பட அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes

Nalam Pasumaiyagam


Thoothukudi Business Directory