» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திண்டுக்கல் நிர்மலா கொலை வழக்கில் 3பேர் கைது: தூத்துக்குடியில் போலீஸ் விசாரணை

வெள்ளி 24, செப்டம்பர் 2021 12:27:53 PM (IST)

திண்டுக்கல் நிர்மலா கொலை தொடர்பாக தூத்துக்குடியில் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவராக இருந்தவர் பசுபதி பாண்டியன். இவர் கடந்த 2012ஆம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி திண்டுக்கல் அருகே நத்தவனப்பட்டியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பசுபதி பாண்டியனின் கொலை வழக்கில் தொடர்புடைய மூதாட்டி நிர்மலா (70), என்பவர் நேற்று முன்தினம் திண்டுக்கல்லில் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

இந்நிலையில், நிர்மலா கொலை வழக்கில் திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி மேட்டுப்பட்டியைச் சேர்ந்த அய்யனார்(21), தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தென் மண்டலச் செயலாளர் திண்டுக்கல் அடுத்துள்ள கரட்டழகன்பட்டியைச் சேர்ந்த பெ.நடராஜன்(45), செம்பட்டி சீவல்சரகு பகுதியைச் சேர்ந்த பூபாலன்(21) ஆகிய மூவர் தாடிக்கொம்பு போலீசார் கைது செய்துள்ளனர்.  மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக தமிழ்ச்செல்வன், சங்கிலி கருப்பன் ஆகியோரை தேடி வருகின்றனர். செல்போன் சிக்னல் மூலம் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் இருப்பதாக தெரிய வந்ததையடுத்து, தனிப்படையினர் விசாரணை நடத்தினர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest CakesNalam Pasumaiyagam
Thoothukudi Business Directory