» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிரித்ததால் தகராறு: ஓட்டலில் இருதரப்பினர் பயங்கர மோதல்

வியாழன் 23, செப்டம்பர் 2021 5:02:08 PM (IST)கோவில்பட்டியில் தனியார் ஓட்டலில் இரு தரப்பினர் சேர், தண்ணீர் செம்பு, குழம்பு வாளி என கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் எடுத்து தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பார்க் எதிரே தனலெட்சுமி என்ற தனியார் ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்றிரவு வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த அருண்குமார், பால்ராஜ், நாகராஜ், அஜித்குமார், சங்கர நாரயணன் ஆகியோர் சாப்பிட வந்தனர். அப்போது அங்கு ஏற்கனவே கிருஷ்ணா நகரைச் சேர்ந்த பிரசாத், சிவராமன், முருகன் ஆகியோர் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அருண்குமார் மற்றும் அவரது நண்பர்கள் இந்த ஓட்டலில் சாப்பிடுவது வழக்கம் என்பதால் அங்கு பணிபுரியும் ஊழியர்களுடன் சிரிச்சு பேசி கொண்டிருந்தனர்.

அப்போது அருகில் சாப்பிட்டுக் கொண்டு இருந்த பிரசாத் மற்றும் அவரது நண்பர்கள் தங்களை பார்த்து தான் அவர்கள் சிரிப்பதாக நினைத்து, அருண்குமார் மற்றும் அவரது நண்பர்களிடம், 'எங்களை பார்த்து ஏன் சிரித்தீர்கள்' என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள், 'நாங்கள் உங்களை பார்த்து சிரிக்க வில்லை' என்று கூறியுள்ளனர். ஆனாலும் இதனை ஏற்க மறுத்த அவர்கள், எங்களை பார்த்து தான் நீங்கள் சிரித்தீர்கள் என்று கூறவே, இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதனைத்தொடர்ந்து அருண்குமார் மற்றும் அவரது நண்பர்கள் தாங்கள் சாப்பிட்டதற்கு பில் கொடுத்து விட்டு அங்கிருந்து புறப்பட முயன்றுள்ளனர்.

ஆனாலும் பிரசாத் மற்றும் அவரது நண்பர்கள் மீண்டும் வந்து அருண்குமார் உள்ளிட்டோரிடம் 'எங்களை பார்த்து எப்படி சிரிக்கலாம், எப்படி பேச லாம்' என்று கூற இருதரப்புக்கு இடையே கைகலப்பானது. மேலும் ஓட்டலில் இருந்த சேர், தண்ணீர் செம்பு, குழம்பு வாளி என கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் எடுத்து வீசி யெறிந்து ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதனால் சிறிது நேரத்தில் ஓட்டல் போர்களம் போன்று காட்சியளித்தது. இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். 

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரு தரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர் பாக இருதரப்பினர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார், ஓட்டலில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓட்டலில் இரு தரப்பினர் மோதிக்கொண்ட சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

Sep 23, 2021 - 09:07:49 PM | Posted IP 162.1*****

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்.. ஏம்பா அதுக்கு ஏன் அடிதடி வம்பு???

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory