» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குலசை தசரா திருவிழாவை நடத்தக்கோரி போராட்டம் : எம்ஆர் காந்தி எம்எல்ஏ உட்பட 97பேர் கைது!

செவ்வாய் 21, செப்டம்பர் 2021 4:34:54 PM (IST)



குலசேகரபட்டனத்தில் தசரா திருவிழாவை நடத்தக் கோரி தடையை மீறி உண்ணாவிரத போராட்டம் நடத்த முயன்ற எம்ஆர் காந்தி எம்எல்ஏ உள்ளிட்ட பா.ஜவினரை போலீசார் கைது செய்தனர். 

முத்தாரம்மன் கோயில் தசரா விழா, மைசூருக்கு அடுத்தபடியாக வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு தசரா திருவிழா, வருகிற அக்.6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகிஷா சூரசம்ஹாரம், அக்.15ம் தேதி நள்ளிரவில் நடக்கிறது. இதில் கடந்தாண்டு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக  தசரா திருவிழா   கட்டுப்பாடுகளுடன் நடந்தது.

திருவிழா கொடியேற்றம், மகிஷா சூரசம்ஹாரம்  உள்ளிட்ட  முக்கிய நிகழ்ச்சிகளில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.  மேலும் விரதமிருக்கும்  பக்தர்கள், தங்கள் ஊரிலேயே  வேடமணிந்து  தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டனர். இந்நிலையில்  தற்போதும் கொரோனா தொற்று காரணமாக கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்டு வருவதால்  கடந்தாண்டைப்போலவே இந்தாண்டும்  தசரா திருவிழா நடத்த அனுமதி அளிக்க வேண்டுமென தசரா குழுக்கள் கோரிக்கை விடுத்தன. மேலும் தசரா குழுக்களுக்கு காப்புகளை பெறுவதற்கும்  ஒரு குழுக்களுக்கு 5 பேருக்கு அனுமதிச்சீட்டு வழங்கி அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், குலசேகரபட்டினத்தில் தசரா திருவிழா, சூரசம்ஹாரத்தை வழக்கம் போல் நடத்த வேண்டும். விழாவில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி குலசேகரபட்டினம் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு நாகர்கோவில் பாஜக எம்எல்ஏ எம்ஆர் காந்தி தலைமயில் உண்ணாவிரத போராட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து தடையை மீறி போராட்டம் நடத்தியதாக 18 பெண்கள் உட்பட 97பேரை குலசேகரன்பட்டனம் போலீசார் கைது செய்தனர். 



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory