» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வெடி விபத்தில் கார், 30க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் : வெடிமருந்து குடோன் உரிமையாளர் கைது!

செவ்வாய் 21, செப்டம்பர் 2021 10:33:05 AM (IST)சாத்தான்குளம் அருகே காரில் இருந்த வெடி வெடித்ததில் கார் வெடித்துச் சிதறியது. இதனால் அருகிலிருந்த 30க்கு மேற்பட்ட வீடுகளிலும் சேதம் ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிளை ஆனந்தவிளையை சேர்ந்தவர் தானியல் மகன் பாலகிருஷ்ணன் (45). இவர் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள அணைக்கரையில் வெடிகுடோன் அமைத்து திருமணம் மற்றும் திருவிழாக்களுக்கு வெடி தயாரித்து கொடுத்து வருகிறார். நேற்று அவரது காரில் சீட்டுக்கு அடியில் ரூ.30 ஆயிரம் மதிப்பில் தயாரிக்கப்பட்ட வெடிகளை வைத்துவிட்டு அவர் வீட்டுக்கு வந்துள்ளார். அவர் வீட்டுக்கு வந்ததும் ரிமோட் மூலம் கார் கதவை மூடி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக காரில் இருந்த வெடி வெடித்துச் சிதறியதில் கார் வெடித்து சுக்குநூறாகியது. 

இதில் பாலகிருஷ்ணனுக்கு கையில் லேசான காயம் ஏற்பட்டது. மேலும், அருகாமையிலுள்ள 30-க்கு மேற்பட்ட வீடுகளில் விரிசல் உண்டாகி சேதமடைந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சாத்தான்குளம் டிஎஸ்பி கண்ணன் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) பாஸ்கர், உதவி ஆய்வாளர் முரளிதரன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதையடுத்து காரில் அனுமதியின்றி வெடி பொருள்கள் கொண்டு வந்ததாக பாலகிருஷ்ணனை காவலர்கள் கைது செய்தனர். சம்பவ இடத்தை மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அதிர்ஷ்டவசமாக இவ்விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்வில்லை. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் குண்டு வெடித்ததுபோல் இருந்தாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். காரில் இருந்த வெடி வெடித்ததில் கார் மற்றும் வீடுகள் சேதமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory