» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ரூ.120 கோடி மதிப்பில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை திட்டம் : கனிமொழி எம்பி ஆய்வு

செவ்வாய் 7, செப்டம்பர் 2021 9:33:56 PM (IST)தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அமையவுள்ள இடத்தினை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அமையவுள்ள இடத்தினை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி இன்று  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் ரூ.120 கோடி மதிப்பில் 100 படுக்கைகள் கொண்ட இ.எஸ்.ஐ. மருத்துவமனை அமைப்பதற்கான அனுமதி 1997ஆம் ஆண்டு கிடைக்கப்பெற்றது. 2014ஆம் ஆண்டு இ.எஸ்.ஐ. மருத்துவமனை அமைப்பதற்கு திட்டம் தீட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு அது செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. 

அதற்கு பிறகு மருத்துவமனையை துவங்க புதிதாக பதவியேற்றுக்கொண்டிருக்ககூடிய மத்திய அமைச்சர் குபேந்தர் யாதவிடம் கோரிக்கை அளித்தோம். அவரும் பணிகள் தொடங்குவதற்கு அனுமதி தந்துள்ளார்கள். பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. எனவே மருத்துவமனை அமையவுள்ள இடத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது என தெரிவித்தார். ஆய்வில் சொத்து மேலாண்மை பிரிவு / இ.எஸ்.ஐ. பிராந்திய அதிகாரி துணை இயக்குநர் அருள்ராஜ், சிப்காட் திட்ட மேலாளர் லியோவாஸ், வட்டாட்சியர் ஜஸ்டின், முக்கிய பிரமுகர் ஜெகன் பெரியசாமி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து

kumarSep 13, 2021 - 11:59:59 AM | Posted IP 162.1*****

town to sipcot new road arranged piease firstgate to sipcot

TN69Sep 9, 2021 - 09:55:31 PM | Posted IP 173.2*****

நல்லது. விரைவாக முடித்து காட்ட வாழ்த்துக்கள்

TN69Sep 9, 2021 - 09:54:49 PM | Posted IP 173.2*****

நல்லது. விரைவாக முடித்து காட்ட வாழ்த்துக்கள்

ராஜாSep 9, 2021 - 04:44:31 PM | Posted IP 162.1*****

good

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam

Black Forest CakesThoothukudi Business Directory