» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மரத்தில் கார் மோதி விபாயாரி பரிதாப சாவு : 6 பேர் படுகாயம்

ஞாயிறு 1, ஆகஸ்ட் 2021 10:59:50 PM (IST)

கோவில்பட்டி அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் விபாயாரி பரிதாபமாக உயிரிழந்தார். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கழுநீர்குளம் ஊருணி தெருவை சேர்ந்தவர் சுப்பையா பாண்டியன் மகன் முத்துவேல் குமார் (39). இவர் காய்கறி கடை மற்றும் டீக்கடை நடத்தி வந்தார். இவருடைய மனைவி ஆவுடை ஈஸ்வரி (35). விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி கோவிலில் பொங்கல் வைப்பதற்காக முத்துேவல் குமார் தனது குடும்பத்தினர், உறவினர்கள், மற்றும் கடையில் வேலை பார்ப்பவர்களை அழைத்துக் கொண்டு காரிலும், வேனிலும் நேற்று இரவு புறப்பட்டார். 

குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை வேனிலும், தன்னுடைய காரில் மற்றவர்களையும் ஏற்றிக்கொண்டார். முத்துவேல் குமார் காரை ஓட்டினார். இன்று அதிகாலை 3 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையை அடுத்துள்ள கல்லூரி அருகே கார் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் ஓரத்தில் உள்ள புளியமரத்தில் மோதியது. இதில் முத்துவேல் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காரில் பயணம் செய்த ஆலங்குளம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த முருகையா மகன் சாமியா பாண்டியன் (31), முருகன் மகன் சண்முகவேல் (37), சண்முகம் மகன் சிவா (24), பொன்னுச்சாமி மகன் மணிகண்டன் (34), குமார் மகன் முத்துச்செல்வம் (30), முத்துராமலிங்கம் (48) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன் நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி, சப்-இன்ஸ்பெக்டர் சிலுவை அந்தோணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். முத்துவேல்குமார் பிணத்தை பிரேத பரிசோதனைக்காகவும், காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest CakesNalam Pasumaiyagam

Thoothukudi Business Directory