» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசு மருத்துவமனையில் ரூ.1 கோடி மதிப்பிலான ஆக்சிஜன் ஜெனரேட்டர்: கனிமொழி எம்பி திறந்து வைத்தார்

சனி 31, ஜூலை 2021 9:48:37 PM (IST)கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ரூ.1 கோடி மதிப்பிலான ஆக்சிஜன் ஜெனரேட்டரை கனிமொழி எம்பி திறந்து வைத்தார். மேலும் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 11 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான ஆதார நிதியுதவி மற்றும் 30 மகளிருக்கு மானிய விலையிலான இருசக்கர வாகனங்களை வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ரூ.1 கோடி மதிப்பிலான ஆக்சிஜன் ஜெனரேட்டர் திறப்பு நிகழ்ச்சி மற்றும் கோவில்பட்டி மந்தித்தோப்பு பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான வீடுகள் திறப்பு நிகழ்ச்சி கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில் ராஜ்,  தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு, மந்தித்தோப்பு பகுதியில் தலா ரூ.1.80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 10 மாற்றுத்திறனாளிகளுக்கான வீடுகளை திறந்து வைத்தார். 

மேலும் அங்கு ரூ.3.50 லட்சம் மதிப்பில் சிறு குடிநீர் தொட்டியுடன் கூடிய சின்டெக்ஸ் தொட்டி அமைக்கும் பணிகளையும் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து மந்தித்தோப்பு ஊராட்சி கிருஷ்ணாநகர் முதல் எல்லிஸ்நகர் வரை ரூ.22 லட்சம் மதிப்பிட்டில் கற்சாலை மேம்பாடு செய்தல் பணிகளையும் துவக்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சமூக பொறுப்பு நிதியில் நிறுவப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான ஆக்சிஜன் ஜெனரேட்டரை திறந்து வைத்தார். மேலும் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 11 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான ஆதார நிதியுதவி மற்றும் 30 மகளிருக்கு மானிய விலையிலான இருசக்கர வழங்கினார். சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் , கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ரூ.19.25 லட்சம் மதிப்பில் நிறுவப்பட்ட ஜெனரேட்டரை திறந்து வைத்தார்.

பின்னர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி :  தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மகளிர் நலன் என்று இருந்த துறையை மகளிர் உரிமைத்துறை என பெயர் மாற்றியுள்ளார்கள். ஏனெனில் மகளிர் நலன் என்றால் மகளிருக்கு வேண்டுவதை செய்வது, மகளிர் உரிமை என்பது மகளிருக்கு என்ன தேவை தர வேண்டும் என்பதை உரிமையாக பெறுவது என உரிமைகள் பெறும் துறையாக துறையை தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மாற்றியுள்ளார்கள். மகளிர் சுய உதவிக்குழுக்கள் முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சிக்காலத்தில்தான் துவக்கப்பட்டது. 

அது தளபதி காலத்தில் விரிவாக்கப்பட்டு அதிக அளவிலான பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அதன்பின்னர் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் பெண்களுக்கான நலத்திட்டங்கள் சரிவர வழங்காமல் இருந்து வந்தது. தற்போது பெண்களுக்கான நலத்திட்ட உதவிகள் அதிக அளவில் வழங்கப்படுகிறது. மகளிர் சுய உதவிக்குழுவினர் பெறுகின்ற அந்த கடன்களை குடும்பத்தின் வளர்ச்சிக்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மகளிர்களை மீட்கும் வகையில்   அரசு பல நலத்திட்ட உதவிகளை வழங்குவதில் அரசு உறுதியாக உள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்ற வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். பெண்களுக்கு நகர்ப்புற பேருந்துகளில் கட்டணம் இல்லை. மேலும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் பெறப்பட்டுள்ள மனுக்களின்மீது தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தூத்துக்குடி மாவட்டம் நிவாரண உதவிகள் வழங்குவதில் முதலிடத்தில் உள்ளது. இத்திட்டத்தில் நமது மாவட்டத்தில் பெறப்பட்ட 11000 மனுக்களில் 7500 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்ட அத்தனை மனுக்களுக்கும் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. 

நிச்சயமாக பெண்களுக்கான உரிமைகளும், பலன்களும் நிறைவேற்றும் அரசாக முதலமைச்சர் தளபதி அவர்களின் அரசு உள்ளது.பல்வேறு மாநிலங்களில் கொரோனா அதிகரிக்கும் சூழ்நிலை உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கொரோனா கட்டுக்குள் உள்ளது. பொதுமக்கள் தொடர்ந்து விழிப்புணர்வுடன் மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி சுகாதாரத்தை அதிகரித்து கொரோனா தொற்று இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும் என பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குர் / கூடுதல் ஆட்சியர் சரவணன், மகளிர் திட்ட திட்ட இயக்குநர் பிச்சை, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் சங்கரநாராயணன், வட்டாட்சியர் அமுதா, கோவில்பட்டி ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரிசுப்புராஜ், முக்கிய பிரமுகர்கள் ஆனந்தசேகரன், ஜெகன்பெரியசாமி, கருணாநிதி, முருகேசன், என்.ஆர்.ராதாகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியம், சீனிவாசன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Black Forest Cakes
Thoothukudi Business Directory