» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசின் முடிவுக்கு நன்றி: கனிமொழி எம்.பி.

சனி 31, ஜூலை 2021 8:37:14 AM (IST)

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தியை நீட்டிக்கத் தேவையில்லை என்ற தமிழக அரசின் முடிவுக்கு தூத்துக்குடி எம்.பி. கனிமொழி நன்றி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய உச்சநீதிமன்றம் அளித்த கால அவகாசம் நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில், கால நீட்டிப்பு கேட்டு வேதாந்த நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தது. இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில், தற்போது ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லாததால் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆக்ஸிஜன் உற்பத்தி கால அவகாசம்நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தமிழக அரசின் முடிவுக்கு நன்றி தெரிவிப்பதாகதிமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாட்டு மக்களின் உணர்வை பிரதிபலிக்கும் விதமாக இனி ஒருபோதும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இயங்காது என்ற உறுதிமொழியை காப்பாற்றிய தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி. தமிழ்நாட்டில் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை, எனவே, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் ஆக்ஸிஜன் உற்பத்தியை நீட்டிக்க வேண்டியதில்லை, என்ற தமிழ்நாடு அரசின் முடிவிற்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து

அறிவாளி மக்கள்Jul 31, 2021 - 10:59:46 AM | Posted IP 162.1*****

திறக்க, மூட, திறக்க, மூட,.....அதெல்லாம் முக்கியம் அல்ல, எப்போ காலிப்பன்ன சொல்லுவீங்க அதுதான் முக்கியம்..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam
Black Forest Cakes
Thoothukudi Business Directory